“வெளியே வந்தா முகத்தை மூடிக்கோங்க“ அதிபர் ட்ரம்ப் அட்வைஸ்!

அமெரிக்காவில் வெளியே செல்பவர்கள் மாஸ்க் அல்லது துணியால் வாயையும் மூக்கையும் மூடிக்கொள்ள வேண்டும் அன்று அதிபர் ட்ரம்ப் அட்வைஸ் செய்துள்ளார். தொடர்ந்து பல வாரங்களாக பொது மக்கள் மாஸ்க் அணியக் கூடாது, அதனால் கொரோனா தொற்று பரவல் அதிகமாகும் என்று கூறி வந்த அதிபர் ட்ரம்பின் நிர்வாகம், தற்போது அந்தர் பல்டி அடித்து மாஸ்க் அணியச் சொல்லியிருக்கிறது. அமெரிக்க சர்ஜன் ஜெனரல் ஜெரோம் ஆடம்ஸ் கூறுகையில், புதிதாகக் கிடைத்துள்ள தகவல்கள் படி, கொரோனா தொற்று அறிகுறி தெரியாதவர்களால்
 

“வெளியே வந்தா முகத்தை மூடிக்கோங்க“ அதிபர் ட்ரம்ப் அட்வைஸ்!மெரிக்காவில் வெளியே செல்பவர்கள் மாஸ்க் அல்லது துணியால் வாயையும் மூக்கையும் மூடிக்கொள்ள வேண்டும் அன்று அதிபர் ட்ரம்ப் அட்வைஸ் செய்துள்ளார்.

தொடர்ந்து பல வாரங்களாக பொது மக்கள் மாஸ்க் அணியக் கூடாது, அதனால் கொரோனா தொற்று பரவல் அதிகமாகும் என்று கூறி வந்த அதிபர் ட்ரம்பின் நிர்வாகம், தற்போது அந்தர் பல்டி அடித்து மாஸ்க் அணியச் சொல்லியிருக்கிறது.

அமெரிக்க சர்ஜன் ஜெனரல் ஜெரோம் ஆடம்ஸ் கூறுகையில், புதிதாகக் கிடைத்துள்ள தகவல்கள் படி, கொரோனா தொற்று அறிகுறி தெரியாதவர்களால் வெகு வேகமாக கொரோனா வைரஸ் பரவுவதாக தெரிகிறது. எனவே இந்த புதிய முடிவு எடுக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளார்.

மருத்துவத் துறையினருக்கு அத்தியாவசியமாகத் தேவைப்படும் N95 மாஸ்க்களை பொதுமக்கள் வாங்கும் போது, பெரும் தட்டுப்பாடு ஏற்படும் என்பதற்காகவும் இந்த முடிவுக்கு மருத்துவர்கள் தரப்பிலும் அரசு நோய் கட்டுப்பாட்டு மையம் தரப்பிலும் எதிர்ப்பு இருப்பதாகக் கூறப்படுகிறது. ஆனாலும் அரசு தரப்பில் அழுத்தம் தரப்பட்டு இந்த முடிவு அறிவிக்கப்படுவதாக கூறுகிறார்கள்.

பொதுமக்கள் சாதாரண மாஸ்க்கள் அல்லது துணியால் வாயையும், மூக்கையும் மூடிக்கொண்டால் போதுமானது. தொற்று அறிகுறி தெரியாமல் இருப்பவர்களால் மேலும் கொரோனா பரவாமல் தடுக்க முடியும். அதே சமயத்தில் “சமூக விலகியிருத்தல்”- யையும் கட்டாயம் கடைப்பிடிக்க வேண்டும். இரண்டும் தேவை என்று  டாக்டர். டெபரா பர்க்ஸ் கூறியுள்ளார்.

ஆனால் அதிபராகிய நான் மாஸ்க் அணிய மாட்டேன். பிறநாட்டு அதிபர்கள், பிரதமர்கள், தூதரக அதிகாரிகள் என பலரையும் சந்திக்க வேண்டியிருப்பதால் மாஸ்க் அணிய முடியாது என்று ட்ரம்ப் விளக்கமளித்துள்ளார். அதெப்படிங்க அதிபரே… ஊருக்கு ஒரு நியாயம் உங்களுக்கு ஒரு நியாயமா?

மேலும் அதிபர் ட்ரம்ப், துணை அதிபர் பென்ஸ் ஆகிய இருவருடனும் நெருக்கமாக அருகில் வருபவர்களுக்கு அதிவேக 15 நிமிட கொரோனா சோதனை செய்யப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

A1TamilNews.com

From around the web