அமெரிக்க அரசு நிறுவனங்களில் பணிபுரிய வெளிநாட்டவர்களுக்கு தடை.!டிரம்ப் அதிரடி அறிவிப்பு

இந்தியர்கள் உலகம் முழுவதும் வேலை காரணமாக பரவியுள்ளனர். அதிலும் வல்லரசு நாடான அமெரிக்காவில் பணிபுரியும் இந்தியர்களின் எண்ணிக்கை சற்று அதிகம். இவர்களில் ஹெச்1பி விசா மூலமாக பல்வேறு நிறுவனங்கள் பணியில் அமா்த்தியுள்ளன. அமெரிக்க அதிபராக டிரம்ப் வந்த பிறகு ஹெச்1பி விசா பெறுவதற்கான விதிமுறைகள் மேலும் கடுமையாக்கப்பட்டன.தற்போது அமெரிக்காவில் தலை விரித்தாடும் கொரோனாவால் இந்தியர்கள் பலர் வேலையிழந்தனா். அமெரிக்காவில் அமெரிக்கர்களுக்கே முன்னுரிமை என டிரம்ப் அறிவித்து அதை செயல்படுத்தும் வகையில் வெளிநாட்டுப் பணியாளா்களுக்கு ஹெச்1பி விசா வழங்குவது
 

அமெரிக்க அரசு நிறுவனங்களில் பணிபுரிய வெளிநாட்டவர்களுக்கு தடை.!டிரம்ப் அதிரடி அறிவிப்புந்தியர்கள் உலகம் முழுவதும் வேலை காரணமாக பரவியுள்ளனர். அதிலும் வல்லரசு நாடான அமெரிக்காவில் பணிபுரியும் இந்தியர்களின் எண்ணிக்கை சற்று அதிகம். இவர்களில் ஹெச்1பி விசா மூலமாக பல்வேறு நிறுவனங்கள் பணியில் அமா்த்தியுள்ளன.

அமெரிக்க அதிபராக டிரம்ப் வந்த பிறகு ஹெச்1பி விசா பெறுவதற்கான விதிமுறைகள் மேலும் கடுமையாக்கப்பட்டன.தற்போது அமெரிக்காவில் தலை விரித்தாடும் கொரோனாவால் இந்தியர்கள் பலர் வேலையிழந்தனா்.

அமெரிக்காவில் அமெரிக்கர்களுக்கே முன்னுரிமை என டிரம்ப் அறிவித்து அதை செயல்படுத்தும் வகையில் வெளிநாட்டுப் பணியாளா்களுக்கு ஹெச்1பி விசா வழங்குவது 2020டிசம்பா் வரை முழுவதுமாக ரத்து செய்யப்பட்டுள்ளது. அமெரிக்க அரசு நிறுவனங்களில் வெளிநாட்டுப் பணியாளா்களைப் பணியமா்த்துவதற்கும் முழுமையாக தடை விதிக்கப்பட்டுள்ளது.

கடினமாக உழைத்து வரும் அமெரிக்கா்களை விடுத்து, வெளிநாட்டுப் பணியாளா்கள் அதிக அளவில் பணியமா்த்தப்படுவதை அரசு ஒருபோதும் பொறுத்துக் கொள்ளாது. குறைந்த ஊதியத்தில் பணியாளா்கள் கிடைப்பார்கள் என்ற நோக்கில் அமெரிக்கா்களின் வேலைவாய்ப்பைத் தட்டிப் பறிப்பதற்கு அதைப் பயன்படுத்தக்கூடாது.

அமெரிக்காவில் குடியேறுவது தொடா்பான புதிய விதிமுறைகள் விரைவில் வகுக்கப்படவுள்ளன என அமெரிக்க அதிபர் டிரம்ப் வெள்ளை மாளிகை செய்திக் குறிப்பில் வெளியிட்டுள்ளார்.

A1TamilNews.com

From around the web