இங்கே லைட்டை அணைக்கச் சொல்லிட்டு அமெரிக்காவுக்கு மருந்து அனுப்புறாரா மோடி ஜி?

இந்தியாவில் இன்று இரவு 9 மணிக்கு லைட்டை அணைக்கச் சொல்லி விளக்கு ஏத்தச் சொன்ன பிரதமர் மோடி, கொரோனாவை குணப்படுத்துவதற்காக அமெரிக்காவுக்கு மலேரியா மருந்துகளை அனுப்ப பரிசீலிப்பதாக தெரிய வந்துள்ளது. அமெரிக்காவில் கொரோனாவின் தாக்கம் உச்சத்தைத் தொட்டுள்ளது. அங்கே 3 லட்சத்திற்கும் மேற்பட்டவர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. ஆயிரக்கணக்கில் மக்கள் ஐசியூவில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். வீட்டிலிருந்து சிகிச்சை எடுத்து வருபவர்களும் ஏராளம். நாள் தோறும் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. கொரோனோ நோய் தாக்கம் உச்சக்கட்டத்தில்
 

இங்கே லைட்டை அணைக்கச் சொல்லிட்டு அமெரிக்காவுக்கு மருந்து அனுப்புறாரா மோடி ஜி?ந்தியாவில் இன்று இரவு 9 மணிக்கு லைட்டை அணைக்கச் சொல்லி விளக்கு ஏத்தச் சொன்ன பிரதமர் மோடி, கொரோனாவை குணப்படுத்துவதற்காக அமெரிக்காவுக்கு  மலேரியா மருந்துகளை அனுப்ப பரிசீலிப்பதாக தெரிய வந்துள்ளது.

அமெரிக்காவில் கொரோனாவின் தாக்கம் உச்சத்தைத் தொட்டுள்ளது. அங்கே 3 லட்சத்திற்கும் மேற்பட்டவர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.  ஆயிரக்கணக்கில் மக்கள் ஐசியூவில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். வீட்டிலிருந்து சிகிச்சை எடுத்து வருபவர்களும் ஏராளம். நாள் தோறும் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது.

கொரோனோ நோய் தாக்கம் உச்சக்கட்டத்தில் இருப்பவர்களுக்கு Hydroxychloroquine என்ற மலேரியாவுக்கான மருந்து கொடுப்பதற்கு அமெரிக்க நோய் கட்டுப்பாட்டு மையம் அனுமதி அளித்துள்ளது. அதையடுத்து இந்த மலேரியா மருந்து கொள்முதலுக்கு அமெரிக்க அரசு முயற்சி எடுத்து வருகிறது.

சனிக்கிழமை நடந்த செய்தியாளர்கள் கூட்டத்தில் பேசிய அதிபர் ட்ரம்ப், இந்தியப் பிரதமர் மோடியிடம் பேசினேன். மலேரியா மாத்திரைகள் அனுப்வி வைக்க பரிசீலிக்குமாறு கேட்டுக் கொண்டேன். இந்தியாவில் மலேரியா மாத்திரைகள் நிறைய உற்பத்தி செய்கிறார்கள். 29 மில்லியன் மாத்திரைக்கள் இருப்பில் உள்ளன. இன்னும் உற்பத்தி செய்கிறோம். மேலும் இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்ய கேட்டுள்ளோம்  என்று பேசியுள்ளார்.

அமெரிக்காவுக்கு மலேரியா மாத்திரைகளை அனுப்பி வைக்க பிரதமர் மோடி பரிசீலித்து வருவதாகக் கூறப்படுகிறது.

அமெரிக்காவில் நாள் தோறும் செய்தியாளர்களை சந்தித்துப் பேசும் அதிபர் ட்ரம்ப், கொரோனோ கட்டுப்பாட்டு குழுவில் இடம்பெற்றுள்ள துணை அதிபர் மைக் பென்ஸ், டாக்டர்.அண்டனி ஃபௌச்சி, டாக்டர்.டெபாரா பர்க்ஸ் மற்றும் துறைச்செயலாளர்களுடன் விரிவான விளக்கம் அளித்து வருகிறார்.

பிரதமர் மோடி முதல் தடவை தொலைக்காட்சியில் தோன்றி ஒரு நாள் மக்கள் ஊரடங்கை அறிவித்தார். அப்படியே சாயங்காலம் கைத்தட்டுங்க என்றார். இப்போது லைட்டை அணைச்சு விளக்கு ஏத்துங்கன்னு சொல்லியிருக்கார். 

A1TamilNews.com

From around the web