அதிபர் ட்ரம்ப் நிரபராதி…. அமெரிக்க செனட் அவை விசாரணையில் தீர்ப்பு!

அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் மீது சுமத்தப்பட்ட இரண்டு குற்றசாட்டுகளிலிருந்தும் நிரபராதி என்று செனட் அவையின் விசாரணை முடிவில் தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது. உக்ரைன் நாட்டுக்கு அமெரிக்க உதவிக்கான பிரதி உபகாரமாக ஜனநாயகக் கட்சி அதிபர் வேட்பாளர் ஜோ பைடன் மகனின் வியாபாரம் தொடர்பான விவரங்களைக் கேட்டு அதிகார துஷ்பிரயோகம் செய்தார் என்று அதிபர் ட்ரம்ப் மீது குற்றம் சுமத்தப்பட்டது. இது குறித்தான விசாரணை உறுப்பினர்கள் அவையில் நடைபெற்ற போது, விசாரணையை நடத்த விடாமல் அதிபர் அலுவலகம் இடையூறு செய்ததாக
 

அதிபர் ட்ரம்ப் நிரபராதி…. அமெரிக்க செனட் அவை விசாரணையில் தீர்ப்பு!மெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் மீது சுமத்தப்பட்ட இரண்டு குற்றசாட்டுகளிலிருந்தும் நிரபராதி என்று செனட் அவையின் விசாரணை முடிவில் தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.

உக்ரைன் நாட்டுக்கு அமெரிக்க உதவிக்கான பிரதி உபகாரமாக ஜனநாயகக் கட்சி அதிபர் வேட்பாளர் ஜோ பைடன் மகனின் வியாபாரம் தொடர்பான விவரங்களைக் கேட்டு அதிகார துஷ்பிரயோகம் செய்தார் என்று அதிபர் ட்ரம்ப் மீது குற்றம் சுமத்தப்பட்டது.

இது குறித்தான விசாரணை உறுப்பினர்கள் அவையில் நடைபெற்ற போது, விசாரணையை நடத்த விடாமல் அதிபர் அலுவலகம் இடையூறு செய்ததாக மற்றொரு குற்றச்சாட்டும் சுமத்தப்பட்டு விசாரணை நடந்தது. உறுப்பினர்கள் அவையின் பெரும்பான்மை ஆதரவுடன் செனட் அவை விசாரணைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

செனட் அவையில் வெளிப்படையாக விசாரணை நடைபெற்று தொலைக்காட்சியில் நேரடி ஒளிபரப்பு செய்யப்பட்டு வந்தது. செனட் அவையில் அதிபர் ட்ரம்பின் குடியரசுக் கட்சியினர் பெரும்பான்மை பலம் பெற்றுள்ளனர்.

விசாரணை முடிவில் அதிபர் ட்ரம்ப் குற்றமற்றவர், நிரபராதி என்று தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. முடிவு வெளியானதும் இனி வாழ்நாள் முழுவதும் அதிபர் பதவிக்கு போட்டியிட்டுக் கொண்டே இருப்பேன் என்று ட்ரம்ப் ட்வீட் செய்துள்ளார்.

அமெரிக்கத் தேர்தல் விதிமுறைகள் படி ஒருவர் இரு தடவை தொடர்ந்து அதிபர் பதவியில் இருக்க முடியும். நான்கு ஆண்டுகள் இடைவெளி விட்டு மீண்டும் போட்டியிடுவதற்கு சட்டப்படி அனுமதி உண்டு.

http://A1TamilNews.com

From around the web