அமெரிக்க ‘அண்ணன் ட்ரம்ப்’ க்கு கனடா ‘தம்பி ட்ரூடோ’ ஆதரவு!

ஆடவா: கனடாவி பின்வாசல் வழியாக அமெரிக்காவுக்குள் மலிவு விலை ஸ்டீல் நுழைவதை அனுமதிக்க மாட்டோம் என ஜஸ்டின் ட்ரூடோ தெரிவித்துள்ளார். அதிபர் ட்ரம்ப் இந்த மாத தொடக்கத்தில் வெளிநாட்டிலிருந்து அமெரிக்காவுக்குள் இறக்குமதியாகும் ஸ்டீல் பொருட்களுக்கு 266 சதவீதம் வரை வரி விதித்து இருந்தார். இதனால் கடும் பாதிப்புக்குள்ளானது சீனா தான். அதே சமயத்தில் கனடாவிலிருந்து வரும் ஸ்டீலுக்கு அமெரிக்காவில் வரி கிடையாது. முன்னதாக ட்ரம்ப் எதிர்ப்பு தெரிவித்திருந்தாலும், வட அமெரிக்கா வணிக ஒப்பந்தம் இன்னும் அமலில் தான்
 

அமெரிக்க  ‘அண்ணன் ட்ரம்ப்’ க்கு கனடா ‘தம்பி ட்ரூடோ’ ஆதரவு!

ஆடவா: கனடாவி பின்வாசல் வழியாக அமெரிக்காவுக்குள் மலிவு விலை ஸ்டீல் நுழைவதை அனுமதிக்க மாட்டோம் என ஜஸ்டின் ட்ரூடோ தெரிவித்துள்ளார்.

அதிபர் ட்ரம்ப் இந்த மாத தொடக்கத்தில் வெளிநாட்டிலிருந்து அமெரிக்காவுக்குள் இறக்குமதியாகும் ஸ்டீல் பொருட்களுக்கு 266 சதவீதம் வரை வரி விதித்து இருந்தார். இதனால் கடும் பாதிப்புக்குள்ளானது சீனா தான்.

அதே சமயத்தில் கனடாவிலிருந்து வரும் ஸ்டீலுக்கு அமெரிக்காவில் வரி கிடையாது. முன்னதாக ட்ரம்ப் எதிர்ப்பு தெரிவித்திருந்தாலும், வட அமெரிக்கா வணிக ஒப்பந்தம் இன்னும் அமலில் தான் இருக்கிறது. ட்ரம்பும் கனடா, மெக்சிகோ உடனான வர்த்தகத்தில் பின்னர் சற்று மென்மைப் போக்கை கடைப்பிடிக்க ஆரம்பித்து விட்டார்.

இந்நிலையில், கனடா மூலம் அமெரிக்காவுக்குள் ஸ்டீல் பொருட்களை சீனா உள்ளிட்ட வெளிநாடுகள் அனுப்பக்கூடும் என்ற அச்சுறுத்தல் ஏற்பட்டது. அதற்கு பதில் அளிக்கும் வகையில் கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ அறிக்கை வெளியிட்டுள்ளார்.

கனடா வழியாக வேறு நாட்டின் ஸ்டீல் பொருட்கள் அமெரிக்காவுக்குள் நுழையும் என்ற பேச்சுக்கே இடமில்லை என்று அவர் கூறியுள்ளார். ட்ரம்பின் வர்த்தக நடவடிக்கைகளுக்கு ஆதரவு அளிப்பதாக ட்ரூடோவின் அறிக்கை அமைந்துள்ளது.

 

From around the web