திருச்சி – ராமேஸ்வரம் ரயில் சோதனை ஓட்டம்

தமிழகத்தில் கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த பல்வேறு தடுப்பு முறைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. பாதிப்பு குறைந்து வரும் பகுதிகளில் படிப்படியாக தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. ரயில் போக்குவரத்து ரத்து செய்யப்பட்டிருக்கும் இந்த வேளையில் திருச்சி,-ராமேஸ்வரம் இடையே 240 கி.மீ., துார ரயில் பாதையை மின் வழித்தடமாக மாற்ற மத்திய ரயில்வே அமைச்சகம் முடிவு செய்து அதற்கான தண்டவாள உறுதித்தன்மையை பரிசோதித்து வருகிறது. இதன்படி திருச்சி, ராமேஸ்வரம் இடையே அதிவேக ரயில் இயக்கி ஆய்வு செய்யப்பட்டது. திருச்சியில் இருந்து 4
 

திருச்சி – ராமேஸ்வரம் ரயில் சோதனை ஓட்டம்தமிழகத்தில் கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த பல்வேறு தடுப்பு முறைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. பாதிப்பு குறைந்து வரும் பகுதிகளில் படிப்படியாக தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன.

ரயில் போக்குவரத்து ரத்து செய்யப்பட்டிருக்கும் இந்த வேளையில் திருச்சி,-ராமேஸ்வரம் இடையே 240 கி.மீ., துார ரயில் பாதையை மின் வழித்தடமாக மாற்ற மத்திய ரயில்வே அமைச்சகம் முடிவு செய்து அதற்கான  தண்டவாள உறுதித்தன்மையை பரிசோதித்து வருகிறது.

இதன்படி திருச்சி, ராமேஸ்வரம் இடையே அதிவேக ரயில் இயக்கி ஆய்வு செய்யப்பட்டது.  திருச்சியில் இருந்து 4 பெட்டியுடன் சோதனை ஓட்ட ரயில் இன்ஜின் ராமேஸ்வரம் சென்றது. ரயில் தண்டவாளத்தில் ஓடும் வேளையில் தண்டவாள அதிர்வுகள் பதிவு செய்யப்பட்டன.

இந்த ரயில் பாம்பன் பாலம் வழியாக  இயக்கப்பட்டது. மறுமார்க்கத்தில் ராமேஸ்வரத்தில் இருந்து திருச்சிக்கு சோதனை ரயில் விடப்பட்டது.  இதில் பதிவு செய்யப்பட்ட தண்டவாள அதிர்வுகளின் அடிப்படையில்  மின்வழித்தடம் செயல்படுத்தப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

A1TamilNews.com

From around the web