ஜம்மு காஷ்மீரில் சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி!

ஜம்மு: நாளை முதல் ஜம்மு காஷ்மீரில் சுற்றுலாப் பயணிகளுக்கு அனுமதி வழங்கப்படுகிறது. ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கிய சட்டப்பிரிவு 370யை ரத்து செய்தும், மாநிலத்தை 2 யூனியன் பிரதேசங்களாக பிரித்தும் மத்திய அரசு இரண்டு மாதங்களுக்கு முன்பு அதிரடி அறிவிப்பை வெளியிட்டது. பாதுகாப்பு காரணங்களுக்கான சுற்றுலா பயணிகள் அனைவரும் பள்ளத்தாக்கு பகுதியை விட்டு ஆகஸ்ட் மாதம் 5ஆம் தேதிக்கு முன்னதாகவே வெளியேறினர். சுற்றுலா பயணிகளின் வருகைக்கு அரசு நிர்வாகம் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்திருந்தது. இந்நிலையில், இரண்டு மாதங்களுக்கு
 

ஜம்மு காஷ்மீரில் சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி!

ஜம்மு: நாளை முதல் ஜம்மு காஷ்மீரில் சுற்றுலாப் பயணிகளுக்கு அனுமதி வழங்கப்படுகிறது. ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கிய சட்டப்பிரிவு 370யை ரத்து செய்தும், மாநிலத்தை 2 யூனியன் பிரதேசங்களாக பிரித்தும் மத்திய அரசு இரண்டு மாதங்களுக்கு முன்பு அதிரடி அறிவிப்பை வெளியிட்டது.

பாதுகாப்பு காரணங்களுக்கான சுற்றுலா பயணிகள் அனைவரும் பள்ளத்தாக்கு பகுதியை விட்டு ஆகஸ்ட் மாதம் 5ஆம் தேதிக்கு முன்னதாகவே வெளியேறினர். சுற்றுலா பயணிகளின் வருகைக்கு அரசு நிர்வாகம் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்திருந்தது.

இந்நிலையில், இரண்டு மாதங்களுக்கு பிறகு நிலைமை சீரடைந்ததையடுத்து சுற்றுலா பயணிகளுக்கான தடையை நீக்குவதாக ஆளுநர் சத்யபால் மாலிக் தெரிவித்துள்ளார்.

ஜம்மு காஷ்மீர் செல்ல மத்திய உள்துறை அமைச்சகம் விதித்திருந்த தடையும் விலக்கிக் கொள்ளப்பட்டது. இந்த நடைமுறை நாளை முதல் அமலுக்கு வரும் என சத்யபால் மாலிக் தெரிவித்துள்ளார்.

 

From around the web