மறப்போமா 2009 ஐ? #May18TamilGenocide

தலையை வெளளைத் துண்டால் இறுகிக் கட்டி கண்ணை முடி வெறும் நிலத்தில் மூச்சிழந்து படுத்திருக்கிறது குழந்தை ஒன்று அந்தக் குழந்தையை விக்கித்துப் பார்த்தபடி அழுது கொண்டிருக்கும் இளம் தந்தை…. **** “என்னையும் கொல்லுங்கோடா என்னையும் கொல்லுங்கோடா என்ரை ஐயோ…..” என்று தலையில் அடித்துக் கொண்டு ஒற்றை ஆளாக இரத்தம் தோய்ந்த உடம்போடு நடுவீதியில் அழும் அந்த இளைஞனைப் படம் பிடித்து ஒரு வீடியோ வந்து சேர்கிறது…… **** இன்னொரு வீடியோ வீதியெங்கும் கிளஸ்டர் குண்டுகள் பதம் பார்த்து
 

லையை வெளளைத் துண்டால் இறுகிக் கட்டி கண்ணை முடி வெறும் நிலத்தில் மூச்சிழந்து படுத்திருக்கிறது குழந்தை ஒன்று

அந்தக் குழந்தையை விக்கித்துப் பார்த்தபடி அழுது கொண்டிருக்கும் இளம் தந்தை….

****

“என்னையும் கொல்லுங்கோடா
என்னையும் கொல்லுங்கோடா
என்ரை ஐயோ…..”

என்று தலையில் அடித்துக் கொண்டு ஒற்றை ஆளாக இரத்தம் தோய்ந்த உடம்போடு நடுவீதியில் அழும் அந்த இளைஞனைப் படம் பிடித்து ஒரு வீடியோ வந்து சேர்கிறது……

****

இன்னொரு வீடியோ
வீதியெங்கும் கிளஸ்டர் குண்டுகள் பதம் பார்த்து கிண்டிப் போட்ட உடலங்களை மணந்து பார்த்து விட்டு ஓடும் நாய்கள்…..

****

தெருவெங்கும் மரண ஓலம், வைத்தியசாலைகளையும் பதம் பார்க்கும் விமானக் குண்டு வீச்சுகள்…
அழுவதற்கு நேரமில்லாமல் கிடத்திய இரத்தம் தோய்ந்த உடல்களைக் கட்டிப் பிடித்து விட்டு, துரத்தித் தாக்கும் குண்டுகள் படாது ஓடும் உறவுகள்…

****

“என் அண்ணனைத் தேடித் தருவீர்களா?”

நள்ளிரவு கடந்தும் அந்த அகால வேளையில் வன்னியில் இருந்து வரும் செய்திகளுக்காக நிகழ்ச்சி படைத்துக் கொண்டிருந்த நாளொன்றில் ஐரோப்பிய நாடொன்றில் இருந்து பதை பதைப்போடு அழைத்த அந்த சகோதரியின் குரல்…….

****

“நான் திரும்பவும் உங்களுடன் பேசுவேனோ தெரியாது,”
என்று விட்டு வன்னியில் இருந்து செய்தி மடல் வழியாகப் பிரியாவிடை கொடுத்து விட்டுப் போன ‘புலிகளின் குரல்’ தவபாலன் அண்ணையின் குரல் மறைந்து பத்து வருசம் போய் விட்டது.

மறப்போமா 2009 ஐ? #May18TamilGenocide

 

****

நிமிர்ந்த நன்னடையும் நேர் கொண்ட பார்வையுமாய் துவக்கி இறுகப் பற்றியிருந்த பாங்கில் உறுதியைத் தெறிக்க விட்ட வீர மங்கையர் சப்தமும் ஒடுங்கி சிதைக்கப்பட்ட காட்சிகள் பொய்யாகாதோ…..

****

இனத்தின் காவலர்களாக, எங்களூர் வைரவர்களின் நடமாடும் மறு பிறவிகளாக விளங்கிய அண்ணன்மார்கள் அடிமைகள் போல் வெறும் தேகத்துடன் பின்னால் கைகள் இறுகக்கட்டிப் போட்டு
தலை குனிந்த நாள்
தலை குனிந்தோம்
இன்னும் நிமிரவில்லை

பத்தாண்டுகள் ஆறாத ரணம் மாறாத வடுக்களோடு….

#Justice4TamilGenocide
#JusticeForTamilGenocide
#10YearsOfTamilGenocide
#May18TamilGenocide

– கானா பிரபா

From around the web