திருப்பதியில் இன்று முதல் அனைவரும் தரிசனம் செய்யலாம்! திருப்பதி தேவஸ்தானம் போர்டு அறிவிப்பு!

இந்தியாவில் கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த அறிவிக்கப்பட்டிருந்த தொடர் ஊரடங்கால் வழிபாட்டுத் தலங்களில் பக்தர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டிருந்தது. ஜூன் 8ம் தேதி முதல் பாதிப்பு குறைவாக உள்ள இடங்களில் வழிப்பாட்டுத் தலங்கல் திறக்கப்படும் என மத்திய அரசு அறிவித்திருந்தது. எனினும் சூழ்நிலைகளைப் பொறுத்து அந்தந்த மாநில அரசுகளே முடிவு செய்து கொள்ளலாம் எனவும் மத்திய அரசு குறிப்பிட்டிருந்தது. இதையடுத்து திருப்பதி கோவிலில் பரிசோதனை அடிப்படையில் முதல் கட்டமாக 8ம் தேதி முதல் உள்ளூர் பக்தர்களுக்கு அனுமதி அளித்திருந்தது. சமூக
 

திருப்பதியில் இன்று முதல் அனைவரும் தரிசனம் செய்யலாம்! திருப்பதி தேவஸ்தானம் போர்டு அறிவிப்பு!ந்தியாவில் கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த அறிவிக்கப்பட்டிருந்த தொடர் ஊரடங்கால் வழிபாட்டுத் தலங்களில் பக்தர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டிருந்தது.

ஜூன் 8ம் தேதி முதல் பாதிப்பு குறைவாக உள்ள இடங்களில் வழிப்பாட்டுத் தலங்கல் திறக்கப்படும் என மத்திய அரசு அறிவித்திருந்தது. எனினும் சூழ்நிலைகளைப் பொறுத்து அந்தந்த மாநில அரசுகளே முடிவு செய்து கொள்ளலாம் எனவும் மத்திய அரசு குறிப்பிட்டிருந்தது.

இதையடுத்து திருப்பதி கோவிலில் பரிசோதனை அடிப்படையில் முதல் கட்டமாக 8ம் தேதி முதல் உள்ளூர் பக்தர்களுக்கு அனுமதி அளித்திருந்தது. சமூக இடைவெளியைக் கடைப்பிடித்து முகக்கவசம் அணிந்து வர பக்தர்கள் அறிவுறுத்தப்பட்டனர். ஒரு நாளைக்கு 3000 பக்தர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள் எனவும் அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், இன்று முதல் ஆன்லைனில் புக் செய்த வெளியூர் பக்தர்களும் சாமி தரிசனத்திற்கு அனுமதிக்கபடுவார்கள் என திருப்பதி தேவஸ்தான நிர்வாகம் அறிவித்துள்ளது. கொரோனா பாதிப்பு உள்ள மண்டலங்களில் இருந்து வருபவர்களுக்கு அனுமதி வழங்கப்படமாட்டாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

A1TamilNews.com

 

From around the web