அன்பாலயத்திற்காக அமெரிக்காவில் ‘கொஞ்சும் சலங்கை’..

டல்லாஸ்: அமெரிக்காவிலும் தமிழ்நாட்டிலும் இயங்கி வரும் தமிழ்நாடு அறக்கட்டளையின் டல்லாஸ் கிளை சார்பில் ‘கொஞ்சம் சலங்கை’ என்ற நாட்டிய நிகழ்ச்சி நடத்தப்படுகிறது. இந்த நிகழ்ச்சியின் மூலம் திரட்டப்படும் தமிழகத்தின் சீர்காழியில் உள்ள ‘அன்பாலயம்’ ஆதரவற்ற குழந்தைகள் இல்லத்தின் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது. அன்பாலயம் குழந்தைகள் காப்பகம் 1998ம் ஆண்டு, தமிழகத்தின் சீர்காழியில் தொடங்கப்பட்டது. உடல்நலம் மற்றும் மனநலம் குன்றிய குழந்தைகள் 63 பேர் தற்போது அங்கு உள்ளார்கள். இந்த இல்லத்தில் கஜா புயலால் ஏற்பட்ட பாதிப்புகளை
 

அன்பாலயத்திற்காக அமெரிக்காவில் ‘கொஞ்சும் சலங்கை’..

டல்லாஸ்: அமெரிக்காவிலும் தமிழ்நாட்டிலும் இயங்கி வரும் தமிழ்நாடு அறக்கட்டளையின் டல்லாஸ்  கிளை சார்பில்  ‘கொஞ்சம் சலங்கை’ என்ற நாட்டிய நிகழ்ச்சி நடத்தப்படுகிறது. இந்த நிகழ்ச்சியின் மூலம் திரட்டப்படும் தமிழகத்தின் சீர்காழியில் உள்ள ‘அன்பாலயம்’ ஆதரவற்ற குழந்தைகள் இல்லத்தின் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது.
 
அன்பாலயம் குழந்தைகள் காப்பகம் 1998ம் ஆண்டு, தமிழகத்தின் சீர்காழியில் தொடங்கப்பட்டது.  உடல்நலம் மற்றும் மனநலம் குன்றிய குழந்தைகள் 63 பேர் தற்போது அங்கு உள்ளார்கள். இந்த இல்லத்தில் கஜா புயலால் ஏற்பட்ட பாதிப்புகளை சீரமைக்கவும், அடிப்படை வசதிகள் செய்து கொடுக்கவும், நிர்வாகச் செலவுகளுக்காகவும் தேவைப்படும் நிதிக்காக, தமிழ்நாடு அறக்கட்டளையின் டல்லாஸ் கிளை சார்பில் நடவடிக்கை எடுத்து வருகிறார்கள்.
 
நிதி திரட்டும் நிகழ்ச்சியாக, திரையிசை நாட்டியப்பாடல்களுக்கு, டல்லாஸ் நாட்டியப் பெண்களும் குழந்தைகளும் பங்கேற்கும்  “கொஞ்சும் சலங்கை” நாட்டிய நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இயக்கம் டான்ஸ் கம்பெனி சார்பில் நாட்டிய நிகழ்ச்சிக்கான ஒத்திகைகள் நடைபெற்று வருகின்றன. 25க்கும் மேற்பட்டோர் நடனமாட உள்ளார்கள். 
 
வஞ்சிக்கோட்டை வாலிபன், தில்லானா மோகனாம்பாள், சலங்கை ஒலி, படையப்பா, விஸ்வரூபம் போன்ற படங்களில், ஜி.ராமனாதன், எம்.எஸ்.விஸ்வநாதன், இளையராஜா, ஏ.ஆர்.ரஹ்மான், யுவன் ஷங்கர் ராஜா உள்ளிட்டோர் இசையமைத்த திரையிசை நாட்டியப் பாடல்கள் இடம் பெறுகின்றன. 
 
பி.எஸ். வீரப்பாவின் பிரபலமான “சபாஷ் சரியான போட்டி” வசனம் இடம்பெற்ற “கண்ணும் கண்ணும்”  பாடலுக்கு, போட்டி நடனத்தை மேடையில் காணலாம். பாவேந்தர் பாரதிதாசனின் உணர்ச்சி மிக்க “சங்கே முழங்கு” பாடலுக்கும் சிறப்பு நடனம் உண்டு.. சலங்கை ஒலி படத்தில் கமல்ஹாசனின் தகிட தகிட பாடல், படையப்பாவில் மின்சாரப்பூவே போன்ற சூப்பர் ஹிட் பாடல்களுக்கும் நடனக் கலைஞர்கள் பம்பரமாக சுழன்று ஒத்திகையில் ஈடுபட்டுள்ளார்கள். மாபெரும் கலை விருந்தாக இந்த நிகழ்ச்சி அமைய உள்ளது.
அன்பாலயத்திற்காக அமெரிக்காவில் ‘கொஞ்சும் சலங்கை’..
தமிழ்நாடு அறக்கட்டளையின் டல்லாஸ் கிளை சார்பில் சுமார் 100 பேர் கொண்ட தன்னார்வலர்கள் குழு ஏற்பாடுகளை செய்து வருகிறார்கள். ஃப்ரிஸ்கோ சென்டினியல் உயர்நிலைப் பள்ளி வளாக அரங்கத்தில் பிப்ரவரி 9ம் தேதி, சனிக்கிழமை மாலை 5:00 மணி முதல் 7:30 வரை  “கொஞ்சும் சலங்கை” யை கண்டு கேட்டு ரசிக்கலாம்.
 
டல்லாஸில் கொஞ்சும் சலங்கைகள், சீர்காழியில் ஆதரவற்ற குழந்தைகளுக்கு நலத்திட்ட உதவியாக சென்றடைகிறது. முழுக்க முழுக்க  உள்ளூர் கலைஞர்கள் பங்கேற்கும்  திரையிசை நாட்டிய நிகழ்ச்சி என்ற சிறப்பும் பெறுகிறது. 
 
– வணக்கம் இந்தியா
 

From around the web