சென்னையை அதிர வைத்த இஸ்லாமியர்களின் போராட்டம்!

சென்னை: குடியுரிமை சட்டத் திருத்தத்திற்கு எதிராக சென்னை ஆலந்தூரில் இஸ்லாமியர்கள் குடும்பத்துடன் பேரணியில் ஈடுபட்டனர். இதனால், சுமார் 4 மணி நேரம் முக்கிய சாலைகளில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் சார்பில் ஆளுநர் மாளிகை நோக்கி பேரணி செல்ல திட்டமிடப்பட்ட நிலையில், காவல்துறையினர் அனுமதி மறுத்ததால், ஆலந்தூர் போக்குவரத்து பணிமனையிலிருந்து 1 கிலோ மீட்டர் தூரத்திற்கு பேரணி நடைபெற்றது. பெண்கள், சிறுவர் – சிறுமிகள் என இஸ்லாமியர்கள் குடும்பத்துடன் இந்த பேரணியில் பங்கேற்றனர். மனிதநேய ஜனநாயக
 

சென்னையை அதிர வைத்த இஸ்லாமியர்களின் போராட்டம்!சென்னை: குடியுரிமை சட்டத் திருத்தத்திற்கு எதிராக சென்னை ஆலந்தூரில் இஸ்லாமியர்கள் குடும்பத்துடன் பேரணியில் ஈடுபட்டனர். இதனால், சுமார் 4 மணி நேரம் முக்கிய சாலைகளில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் சார்பில் ஆளுநர் மாளிகை நோக்கி பேரணி செல்ல திட்டமிடப்பட்ட நிலையில், காவல்துறையினர் அனுமதி மறுத்ததால், ஆலந்தூர் போக்குவரத்து பணிமனையிலிருந்து 1 கிலோ மீட்டர் தூரத்திற்கு பேரணி நடைபெற்றது.

பெண்கள், சிறுவர் – சிறுமிகள் என இஸ்லாமியர்கள் குடும்பத்துடன் இந்த பேரணியில் பங்கேற்றனர். மனிதநேய ஜனநாயக கட்சியின் பொதுச் செயலாளர் தமிமுன் அன்சாரி உள்ளிட்டோர் பேரணியில் பங்கேற்றனர்.

பேரணியின் போது குடியுரிமை சட்டத் திருத்தத்தால் இஸ்லாமியர்கள் மற்றும் இலங்கைத் தமிழர்கள் பாதிக்கப்படுவதாகவும், இதனால் குடியுரிமை சட்டத் திருத்தத்தை திரும்பப்பெற வேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டது.

சுமார் மூன்றரை மணி நேரம் நீடித்த இந்த கண்டன பேரணியால், ஆலந்தூர், கிண்டி, விமான நிலையம் என பல்வேறு பகுதிகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

https://www.A1TamilNews.com

 

From around the web