தமிழக உள்ளாட்சி தேர்தல் இட ஒதுக்கீடு! உச்சநீதிமன்றம் அதிரடி!

தமிழகத்தில், மாநில தேர்தல் ஆணையத்துக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் ஊரக உள்ளாட்சி தேர்தல் அறிவிப்பாணையில் இடஒதுக்கீடு முறையாக மேற்கொள்ளப்படவில்லை என்று திமுக உள்ளிட்ட எதிர்கட்சிகள் சார்பில் வழக்கு தொடரப்பட்டிருந்தது. உள்ளாட்சித் தேர்தல் இடஒதுக்கீட்டில், ஒரு பதவிக்கு 2011ம் ஆண்டு மக்கள் தொகை கணக்கீடும், மற்ற பதவிகளுக்கு 1991ம் ஆண்டு மக்கள் தொகை கணக்கிடும் பின்பற்றப்படுவதாக திமுக சார்பில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. 2011-ஆம் ஆண்டு மக்கள்தொகை அடிப்படையில்தான் உள்ளாட்சித் தேர்தலுக்கான இட ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என தமிழக அரசு வழக்கறிஞர்
 

தமிழக உள்ளாட்சி தேர்தல் இட ஒதுக்கீடு! உச்சநீதிமன்றம் அதிரடி!மிழகத்தில், மாநில தேர்தல் ஆணையத்துக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் ஊரக உள்ளாட்சி தேர்தல் அறிவிப்பாணையில் இடஒதுக்கீடு முறையாக மேற்கொள்ளப்படவில்லை என்று திமுக உள்ளிட்ட எதிர்கட்சிகள் சார்பில் வழக்கு தொடரப்பட்டிருந்தது.

உள்ளாட்சித் தேர்தல் இடஒதுக்கீட்டில், ஒரு பதவிக்கு 2011ம் ஆண்டு மக்கள் தொகை கணக்கீடும், மற்ற பதவிகளுக்கு 1991ம் ஆண்டு மக்கள் தொகை கணக்கிடும் பின்பற்றப்படுவதாக திமுக சார்பில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

2011-ஆம் ஆண்டு மக்கள்தொகை அடிப்படையில்தான் உள்ளாட்சித் தேர்தலுக்கான இட ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என தமிழக அரசு வழக்கறிஞர் எடுத்துரைத்தார்.
விசாரணையை ஏற்றுக்கொண்டு புதிய அறிவிப்பாணை படி உள்ளாட்சித் தேர்தலை நடத்தலாம் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.புதிய 9 மாவட்டங்களில் 3 மாதங்களுக்குள் வார்டு வரையறையை முடித்து தேர்தலை நடத்த வேண்டும் என்றும் கோரப்பட்டுள்ளது.

வழக்கின் தீர்ப்பு வெளியான சூழ்நிலையில் தமிழகத்தில் திட்டமிட்டபடி உள்ளாட்சி தேர்தல் நடத்தப்படும் என மாநில தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

மேலும்,உச்சநீதிமன்ற ஆணைப்படியே , 2011ம் ஆண்டு நடத்தப்பட்ட மக்கள் தொகை கணக்கெடுப்பு அடிப்படையில்தான் வார்டு மறுவரையறை செய்யப்பட்டுள்ளது எனவும்,ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது எனவும் அறிவித்துள்ளது.

https://www.A1TamilNews.com

From around the web