மகிழ்ச்சி!! பழந்தமிழர் “தாமிரபரணி நகர நாகரீகம்” அகழ்வாரய்ச்சிக்கு தமிழக அரசின் அதிரடித் திட்டம்!!

ஆதிச்சநல்லூர், சிவகளை அகழ்வாராய்ச்சிகளைத் தொடர்ந்து, கொற்கை வரையிலான “தாமிரபரணி நகர நாகரீகம்” தொடர்பான அகழ்வாராய்ச்சிக்கான கள ஆய்வுப் பணிகள் நடத்துவதற்கு தமிழக அரசு நடவடிக்கைகள் எடுத்து வருகிறது. தமிழக தொல்லியல் துறை முதன்மைச் செயலாளர் மற்றும் ஆணையராக இருக்கும் உதயச்சந்திரன் ஐ.ஏ.எஸ் இது தொடர்பான தகவல்களை ஃபெட்னா 2020 இணைய வழி தமிழ் விழாவில் பகிர்ந்து கொண்டார். தமிழ்த் தொன்மங்கள்: தோற்றமும் தொடர்ச்சியும் என்ற தலைப்பில் உரையாற்றிய உதயச்சந்திரன் இது குறித்து கூறியுள்ளதாவது, ”கிட்டத்தட்ட 120 ஆண்டுகளுக்கு
 

மகிழ்ச்சி!! பழந்தமிழர் “தாமிரபரணி நகர நாகரீகம்” அகழ்வாரய்ச்சிக்கு தமிழக அரசின் அதிரடித் திட்டம்!!ஆதிச்சநல்லூர், சிவகளை அகழ்வாராய்ச்சிகளைத் தொடர்ந்து, கொற்கை வரையிலான  “தாமிரபரணி நகர நாகரீகம்” தொடர்பான அகழ்வாராய்ச்சிக்கான கள ஆய்வுப் பணிகள் நடத்துவதற்கு தமிழக அரசு நடவடிக்கைகள் எடுத்து வருகிறது.

தமிழக தொல்லியல் துறை முதன்மைச் செயலாளர் மற்றும் ஆணையராக இருக்கும் உதயச்சந்திரன் ஐ.ஏ.எஸ் இது தொடர்பான தகவல்களை ஃபெட்னா 2020 இணைய வழி தமிழ் விழாவில் பகிர்ந்து கொண்டார்.

தமிழ்த் தொன்மங்கள்: தோற்றமும் தொடர்ச்சியும் என்ற தலைப்பில் உரையாற்றிய உதயச்சந்திரன் இது குறித்து கூறியுள்ளதாவது, 

”கிட்டத்தட்ட 120 ஆண்டுகளுக்கு முன்னால் ஆதிச்சநல்லூரில் அலெக்சாண்டர் ரியா ஆய்வு செய்தார். அதன் பிறகு, 15 ஆண்டுகளுக்கு முன்னால் மத்தியத் தொழில் துறை ஆய்வு செய்ய முயன்றது. அந்த இடத்தில் மீண்டும் அகழாய்வு செய்யப்படுகிறது. புதைக்கப்பட்ட இடங்களில் மட்டுமன்றி மக்கள் வாழுமிடங்களிலும் ஆதிச்சநல்லூர் அகழாய்வுகள் தொடர்கின்றன.

சிவகளை என்ற இடத்திலும் ஆராய்ச்சி தொடங்கப் பட்டுள்ளது. தமிழகத்தின் கடைக்கோடி கிராமத்தில் வசிக்கும் ஒரு பள்ளி ஆசிரியர் எனக்கு அனுப்பிய அலைபேசி செய்தியிலிருந்து, அதன் தொடர்ச்சியை கண்டுபிடித்தோம். எங்கள் அலுவலர்கள் மற்றும் நானும் சென்று பார்த்து, அந்த இடம் அகழாய்வுக்கு உரிய சிறந்த இடம் என்று தொடங்கியுள்ளோம்.

தோண்டத் தோண்ட பல செய்திகள் கிடைக்கின்றன. முதுமக்கள் தாழிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. பல தொல்லியல் ஆய்வாளர்களின் கருத்துப்படி, சிவகளை மிக முக்கியமான ஆய்வுப் பகுதியாக இருக்கும். இன்னும் பழமையான கணிப்பு கிடைக்கக் கூடும் என்று சொல்கிறார்கள். 

2 ஆயிரத்து 600 வருடங்கள் கீழடி என்றால் சிவகளை 2 ஆயிரத்து 900 ஆயிரம் ஆண்டுகள் ஆதிச்சநல்லூர். இன்னும் பழமையாகக் கூட அங்கு கிடைக்கக்கூடும் என்றும் சொல்கிறார்கள். ஆதிச்சநல்லூர், சிவகளை என்று தனித்தனியாக பார்ப்பதை விட “தாமிரபரணி நகர நாகரீகம்” என்றளவில் தான் அதை பார்க்க வேண்டும். ஆதிச்சநல்லூரில் ஆரம்பித்து கொற்கை வரை செல்ல வேண்டும். அது தாமிரபரணி நகர நாகரீகமாகத் தான் இருக்க வேண்டும் என்ற அடிப்படையில் அணுகிக் கொண்டிருக்கிறோம்.

தாமிரபரணி ஆற்றுப் படுகையில் என்னென்ன பகுதிகள் எல்லாம் தொல்லியல் ஆய்வுக்கு உட்படுத்த வேண்டும் என்ற களஆய்வை மேற்கொள்ளப்பட்டுள்ளது. அறிவியல் பூர்வமான அணுகுமுறையுடன் இருக்கும் இந்த கள ஆய்வு தொல்லியல் வல்லுனர்களையும், ஆர்வலர்களையும் வழிநடத்தக் கூடிய வகையில் ஆவணமாக இருக்கும். முக்கியமான் தொல்லியல் அறிஞர்களின் துணையுடன் இது நடைபெற்று வருகிறது.

அதைப் போல் கொடுமணலிலும் மிக அரிய செய்திகள் எல்லாம் கிடைக்கின்றன.பல முறை ஆய்வு செய்யப்பட்ட பகுதி என்றாலும் இன்னும் ஆய்வுகள் தொடர்கின்றன.

கீழடி, ஆதிச்சநல்லூர், கொடுமணல் பகுதிகளை விட இன்னும் பழமையான பகுதிகள் தமிழகத்தின் வடக்குப் பகுதியில் இருக்கின்றன. தர்மபுரி, கிருஷ்ணகிரியில் ஆரம்பித்து திருவண்ணாமலை, விழுப்புரம் வரையிலான பகுதிகளில் கற்கால கருவிகள் நிறைய கிடைக்கின்றன.  அங்கே கள ஆய்வு செய்வதற்காக சர்மா ஹெரிட்டேஜ் சென்டர் என்ற முக்கியமான அமைப்புடன் சேர்ந்து தொடரப் போகிறோம்.

இந்த இரண்டு கள ஆய்வுகளும்  தமிழகத்தின் தொல்லியல் ஆய்வுகளை வழிநடத்தும் ஆவணங்களாக இருக்கும். தஞ்சைப் பகுதியிலும் , அடுத்த ஆண்டு புதிதாக களஆய்வு செய்ய வாய்ப்புகள் இருக்கின்றன,” என்று கூறியுள்ளார்.

வட அமெரிக்கத் தமிழ்ச்சங்கப் பேரவை(ஃபெட்னா)யின் 2020ம் ஆண்டு தமிழ் விழா, கொரோனா பேரிடர் காரணமாக இணையவழி விழாவாக வழக்கமான நிகழ்ச்சிகளுடன் நடந்து வருகிறது.  நேரலைக்கான நிகழ்ச்சி நிரல் மற்றும் காணொலிக்கான இணைப்பு போன்ற விவரங்களை பேரவையின் இணையத்தளத்தில் காணலாம்.

A1TamilNews.com

From around the web