திமுக டெல்லிக்குப் போனா சென்னையில் கிடுக்கிப்பிடி போடுகிறதா அதிமுக?

துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்ட 11 பேர் மீது கட்சித்தாவல் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சபாநாயகருக்கு உத்தரவிடக் கோரி திமுக தொடர்ந்துள்ள வழக்கில், சபாநாயகருக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. இந்நிலையில், தமிழகம் முழுவதும் தடை செய்யப்பட்ட பான் மசாலா, குட்கா போன்ற போதை வஸ்துக்கள் தாராளமாக விற்பனை செய்யப்படுவதாகவும், சென்னையில் கள ஆய்வு செய்துதாகவும் ஆதாரத்துடன் சட்டமன்றத்தில் அரசுக்கு எதிராக குற்றச்சாட்டை வைத்தார் மு.க.ஸ்டாலின். இது குறித்து எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட தி.மு.க சட்டமன்ற உறுப்பினர்கள் மீது
 

திமுக டெல்லிக்குப் போனா  சென்னையில் கிடுக்கிப்பிடி போடுகிறதா அதிமுக?துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்ட 11 பேர் மீது கட்சித்தாவல் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சபாநாயகருக்கு உத்தரவிடக் கோரி திமுக தொடர்ந்துள்ள வழக்கில், சபாநாயகருக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

இந்நிலையில், தமிழகம் முழுவதும் தடை செய்யப்பட்ட  பான் மசாலா, குட்கா போன்ற போதை வஸ்துக்கள் தாராளமாக விற்பனை செய்யப்படுவதாகவும், சென்னையில் கள ஆய்வு செய்துதாகவும் ஆதாரத்துடன் சட்டமன்றத்தில் அரசுக்கு எதிராக குற்றச்சாட்டை வைத்தார் மு.க.ஸ்டாலின்.

இது குறித்து எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட தி.மு.க சட்டமன்ற உறுப்பினர்கள் மீது உரிமை மீறல் பிரச்சினை கொண்டுவந்தனர். அதில் 21 பேருக்கு விளக்கம் கோரி நோட்டீஸ் அனுப்பப்பட்டது. இந்த உரிமை மீறல் நோட்டீஸை எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார் மு.க.ஸ்டாலின்.

சபாநாயகர் நடவடிக்கை எடுக்க இடைக்கால தடை விதித்தது உயர்நீதிமன்றம். இந்த வழக்கை விரைந்து நடத்த வேண்டும் என்று அரசு தலைமை வழக்கறிஞர் விஜய் நாராயணன் தலைமை நீதிபதி அமர்வு முன்பு முறையீடு செய்தார். 

தி.மு.க சார்பாக ஆஜரான மூத்த வழக்கறிஞர் சண்முக சுந்தரம் மற்றும் என்.ஆர் இளங்கோ, 11 சட்டமன்ற உறுப்பினர்கள் தகுதி நீக்க வழக்கில் உச்சநீதிமன்றம் சபாநாயகருக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்ட நிலையில் இதை பொறுத்துக் கொள்ள முடியாத அரசு, உயர் நீதிமன்றத்தால் தடை விதிக்கப்பட்ட வழக்கை விரைந்து எடுத்து விசாரிக்க வேண்டும் என முறையீடு செய்கிறார்.இந்த வழக்கு விசாரணைக்கு நாங்கள் தயாராக இருக்கிறோம் என்று தெரிவித்தனர்.

இதையடுத்து வழக்கு விசாரணையை ஆகஸ்ட் 13-ம் தேதி அன்று விசாரிப்பதாக தலைமை நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

A1TamilNews.com

From around the web