சிகாகோ உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாட்டிற்கு தமிழ்நாடு அரசு 1 கோடி ரூபாய் நிதியுதவி!

சென்னை: சிகாகோவில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாட்டிற்காக தமிழ்நாடு அரசு சார்பில் 1 கோடி ரூபாய் நிதியுதவி வழங்கப்படுவதாக அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. மாநாட்டிற்கு நிதியதவி கேட்டு தமிழக அரசிடம் கோரிக்கை விடப்பட்டதைத் தொடர்ந்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி இந்த நன்கொடை வழங்குவதற்குரிய அரசாணையை வெளியிடச் செய்துள்ளார். மேலும் தமிழ்நாட்டிலிருந்து மாநாட்டில் பங்கேற்கும் 20 பேருக்கு சிகாகோ சென்று வர விமானக் கட்டணம் உள்ளிட்ட செலவினங்களுக்காக 60 லட்சத்து 9 ஆயிரம் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் அரசாணையில் குறிப்பிடப்
 
சிகாகோ உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாட்டிற்கு தமிழ்நாடு அரசு 1 கோடி ரூபாய் நிதியுதவி!சென்னை: சிகாகோவில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாட்டிற்காக தமிழ்நாடு அரசு சார்பில் 1 கோடி ரூபாய் நிதியுதவி வழங்கப்படுவதாக அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

மாநாட்டிற்கு நிதியதவி கேட்டு தமிழக அரசிடம் கோரிக்கை விடப்பட்டதைத் தொடர்ந்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி இந்த நன்கொடை வழங்குவதற்குரிய அரசாணையை வெளியிடச் செய்துள்ளார். 

மேலும் தமிழ்நாட்டிலிருந்து மாநாட்டில் பங்கேற்கும் 20 பேருக்கு சிகாகோ சென்று வர விமானக் கட்டணம் உள்ளிட்ட செலவினங்களுக்காக 60 லட்சத்து 9 ஆயிரம் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் அரசாணையில் குறிப்பிடப் பட்டுள்ளது.

தமிழ் வளர்ச்சித் துறை அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் தலைமையில் தமிழறிஞர்கள் சிகாகோவுக்குச்  சென்றுள்ளனர். அதிமுகவின் முன்னாள் எம்.எல்.ஏ பா.வளர்மதியும் சிகாகோ சென்றுள்ளார்.

உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாட்டைத் தொடங்கி வைத்த தமிழ் வளர்சித் துறை அமைச்சர் மாஃபா பாண்டியராஜன், திருவள்ளுவர் சிலையையும் திறந்து வைத்தார். 

– வணக்கம் இந்தியா

 

From around the web