கடலில் தத்தளித்த 11 கன்னியாகுமரி மீனவர்கள் குஜராத்தில் கரை திரும்பினர்!

கன்னியாகுமரி: கொச்சியிலிருந்து மோட்டார் படகில் மீன்பிடிக்கச் சென்ற 11 கன்னியாகுமரிப் பகுதி மீனவர்கள், எஞ்சின் பழுதானதால் அரபிக்கடலில் தத்தளித்துக் கொண்டிருந்தனர். மும்பையிலிருந்து 165 கடல் மைல்கள் தொலைவில் இருந்தவர்களுக்கு கடற்படையும், கடல் எல்லைப் பாதுகாப்புப் படையும் உதவி செய்தனர். சனிக்கிழமை எஞ்சின் பழுதான படகை, கடற்படை விமானம் கண்டுபிடித்து தகவல் தெரிவித்தது. மீனவர் அமைப்பும் தமிழ்நாடு மீன் வளத்துறை மூலம் கோரிக்கை விடுத்தார்கள். எல்லைப் பாதுகாப்புப் படையினர் சென்று மீனவர்களுக்கு உணவும் தண்ணீரும் வழங்கினார்கள். ஆனால் படகை
 

கன்னியாகுமரி:  கொச்சியிலிருந்து மோட்டார் படகில் மீன்பிடிக்கச் சென்ற 11 கன்னியாகுமரிப் பகுதி மீனவர்கள், எஞ்சின் பழுதானதால் அரபிக்கடலில் தத்தளித்துக் கொண்டிருந்தனர். மும்பையிலிருந்து 165 கடல் மைல்கள் தொலைவில் இருந்தவர்களுக்கு கடற்படையும், கடல் எல்லைப் பாதுகாப்புப் படையும் உதவி செய்தனர். 
 
சனிக்கிழமை எஞ்சின் பழுதான படகை,  கடற்படை விமானம் கண்டுபிடித்து தகவல் தெரிவித்தது. மீனவர் அமைப்பும் தமிழ்நாடு மீன் வளத்துறை மூலம் கோரிக்கை விடுத்தார்கள். எல்லைப் பாதுகாப்புப் படையினர் சென்று மீனவர்களுக்கு உணவும் தண்ணீரும் வழங்கினார்கள். ஆனால் படகை கட்டி இழுத்து வர முடியவில்லை. மீனவர்கள் படகிலேயே தங்கிக் கொண்டார்கள்.
 
அற்புதநாயகி என்ற இந்தப் படகுக்கு ஆபத்பாந்தவனாக செயின் ஆஃப் ஹார்ட் என்ற மற்றொரு படகு. அதிலிருந்தவர்கள் எஞ்சின் பழுதை சரிபார்க்க உதிரிப்பாகங்கள் கொடுத்து உதவியுள்ளார்கள். எஞ்சின் பழுது நீங்கியதும், படகில் குஜராத்தில் உள்ள வெரவால் துறைமுகத்திற்கு வந்து சேர்ந்தார்கள் மீனவர்கள்.
 
இருவர் உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்கள். ஆனால் ஆபத்து ஏதும் இல்லை. 
 
– வணக்கம் இந்தியா

From around the web