அரசு பள்ளிகளை சீரமைக்க பணம் கொடுங்க பாஸ்! கெஞ்சும் தமிழக கல்வித்துறை

அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளின் கட்டமைப்பை மேம்படுத்திட பொதுமக்கள் பங்களிக்க பள்ளிக் கல்வித் துறை இணையதளம் ஒன்றைத் தொடங்கியுள்ளது. contribute.tnschools.gov.in என்ற இணையதளத்தில் பொதுமக்கள் தங்களது பங்களிப்பை வழங்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எந்தெந்த பள்ளிக்கு என்ன வசதிக்காக எவ்வளவு தொகை தேவைப்படுகிறது என இணையதளத்திலேயே குறிப்பிடப்பட்டுள்ளது. அதைப் பார்த்து பொதுமக்களோ, முன்னாள் மாணவர்களோ தாங்கள் விரும்பும் பள்ளிக்கு விரும்பும் தொகையை அளிக்கலாம். நேற்று தொடங்கப்பட்ட இணையதளம் மூலமாக இதுவரை 21 பேர் 96 ஆயிரத்து
 

அரசு பள்ளிகளை சீரமைக்க பணம் கொடுங்க பாஸ்! கெஞ்சும் தமிழக கல்வித்துறைஅரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளின் கட்டமைப்பை மேம்படுத்திட பொதுமக்கள் பங்களிக்க பள்ளிக் கல்வித் துறை இணையதளம் ஒன்றைத் தொடங்கியுள்ளது.

contribute.tnschools.gov.in என்ற இணையதளத்தில் பொதுமக்கள் தங்களது பங்களிப்பை வழங்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எந்தெந்த பள்ளிக்கு என்ன வசதிக்காக எவ்வளவு தொகை தேவைப்படுகிறது என இணையதளத்திலேயே குறிப்பிடப்பட்டுள்ளது.

அதைப் பார்த்து பொதுமக்களோ, முன்னாள் மாணவர்களோ தாங்கள் விரும்பும் பள்ளிக்கு விரும்பும் தொகையை அளிக்கலாம். நேற்று தொடங்கப்பட்ட இணையதளம் மூலமாக இதுவரை 21 பேர் 96 ஆயிரத்து 769 ரூபாய் நன்கொடை அளித்துள்ளதாக இணையதளத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. மொத்தம் 17 ஆயிரத்து 894 பள்ளிகளை மேம்படுத்த வேண்டியுள்ளதாக இணையதளத்தில் பள்ளிக் கல்வித் துறை குறிப்பிட்டுள்ளது.

https://www.A1TamilNews.com

From around the web