உடலில் இயற்கையாக நோய் எதிர்ப்பு சக்தியைப் பெற மாநகராட்சி வெளியிட்டுள்ள அறிவுரைகள்!

தமிழகத்தில் கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த பல்வேறு தடுப்பு முறைகள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. சென்னையின் பல இடங்களில் சித்த மற்றும் இயற்கை மருத்துவ முறையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அத்துடன் இயற்கையிலேயே உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க சென்னை மாநகராட்சி பல்வேறு விழிப்புணர்வு பிரச்சாரங்களை செய்தும், வீடு, வீடாக துண்டு பிரசுரங்கள் வழங்கியும் வருகிறது. அதன்படி கபசுர குடிநீர் பொடியை ஒரு ஸ்பூன் அளவு எடுத்து,200மிலி தண்ணீரில் கலந்து, 15 முதல் 20 நிமிடங்கள் கொதிக்க வைத்து
 

உடலில் இயற்கையாக நோய் எதிர்ப்பு சக்தியைப் பெற  மாநகராட்சி வெளியிட்டுள்ள அறிவுரைகள்!மிழகத்தில் கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த பல்வேறு தடுப்பு முறைகள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. சென்னையின் பல இடங்களில் சித்த மற்றும் இயற்கை மருத்துவ முறையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

அத்துடன் இயற்கையிலேயே உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க சென்னை மாநகராட்சி பல்வேறு விழிப்புணர்வு பிரச்சாரங்களை செய்தும், வீடு, வீடாக துண்டு பிரசுரங்கள் வழங்கியும் வருகிறது.

அதன்படி கபசுர குடிநீர் பொடியை ஒரு ஸ்பூன் அளவு எடுத்து,200மிலி தண்ணீரில் கலந்து, 15 முதல் 20 நிமிடங்கள் கொதிக்க வைத்து கால் டம்ளராக வற்றியப்பின் அதனை, வடிகட்டி குழந்தைகள் 30 மி.லி., பெரியவர்கள், 60 மி.லி., அளவு காலை வேளையில் அருந்த வேண்டும்.

அடிக்கடி வெதுவெதுப்பான தண்ணீரை அவ்வப்போது குடிக்க வேண்டும். சிறிதளவு உப்பு மற்றும் மஞ்சள் கலந்த மிதமான சுடு தண்ணீரில் காலை,மாலை இரு வேளையும் வாய் கொப்பளிக்க வேண்டும்.

துளசி, நொச்சி, வேப்பிலை இவற்றில் எதாவது ஒன்றுடன், மஞ்சள் பொடி மற்றும் உப்பு கலந்து தினமும் 10 முதல் 15 நிமிடங்கள் ஆவி பிடிக்க வேண்டும். வெதுவெதுப்பான பாலில், ஒரு சிட்டிகை மஞ்சள் தூள், 3 சிட்டிகை மிளகு தூள், தேவையான அளவு நாட்டு சர்க்கரை அல்லது வெல்லம் கலந்து, காலை மற்றும் மாலையில் பருக வேண்டும்.

இஞ்சி 5 கிராம், துளசி 10 இலை, மிளகு கால் ஸ்பூன், அதிமதுரம் அரை ஸ்பூன், தண்ணீர் 250 மி.லி., மஞ்சள் தூள் 1சிட்டிகை ஆகியவற்றை நன்கு கொதிக்க வைத்து, வடிகட்டிக் குடிக்க வேண்டும்.

விட்டமின் சி நிறைந்துள்ள பழங்களை அதிக அளவு எடுத்துக் கொள்ள வேண்டும்.
தினமும் 15 முதல் 20 நிமிடங்கள் சூரியக் குளியல் எடுக்க வேண்டும் என்பது போன்ற தகவல் குறிப்புக்களை சென்னை மாநகராட்சி துண்டு பிரசுரங்கள் மூலம் வழங்கி வருகிறது.

A1TamilNews.com

From around the web