உற்றார் உறவினரிடமிருந்து விலகி ரொம்ப ஓடாதேப்பா! கொஞ்சம் நில்லு!!

காலையில் நண்பரிடமிருந்து அலைபேசி அழைப்பு. என்ன பண்றீங்க என கேட்டார். நீங்க என்னவோ அதேதான். நான் நகரத்தில, நீங்க கிராமத்தில அப்புடின்னு சொன்னேன். நண்பர் நன்றாக இனிமையாக பேசக்கூடியவர்,56 வயதிருக்கும். இந்த வயதிலும் சுறுசுறுப்பாக இயங்க கூடியவர். சொகுசு கார் வைத்திருக்கிறார். பெரிய வீடு, மிடுக்கான நடை, அரசியல் பின்புலம் தென்னந்தோப்பு சகிதமாய் ஊரில் உள்ளார். அனைத்தும் உடையவர். கடந்த இருபது வருடமாக அவருடைய வெற்றி தோல்வி என அனைத்தையும் வெளிப்படையாக பரிமாறிக்கொள்வார். திடீரென்று சென்னை வருவார்.
 

உற்றார் உறவினரிடமிருந்து விலகி ரொம்ப ஓடாதேப்பா! கொஞ்சம் நில்லு!!காலையில் நண்பரிடமிருந்து அலைபேசி அழைப்பு. என்ன பண்றீங்க என கேட்டார். நீங்க என்னவோ அதேதான். நான் நகரத்தில, நீங்க கிராமத்தில அப்புடின்னு சொன்னேன். நண்பர் நன்றாக இனிமையாக பேசக்கூடியவர்,56 வயதிருக்கும். இந்த வயதிலும் சுறுசுறுப்பாக இயங்க கூடியவர். சொகுசு கார் வைத்திருக்கிறார். பெரிய வீடு, மிடுக்கான நடை, அரசியல் பின்புலம்
தென்னந்தோப்பு சகிதமாய் ஊரில் உள்ளார். அனைத்தும் உடையவர்.

கடந்த இருபது வருடமாக அவருடைய வெற்றி தோல்வி என அனைத்தையும் வெளிப்படையாக பரிமாறிக்கொள்வார். திடீரென்று சென்னை வருவார். சிங்கப்பூர் போவார். இங்கு அந்த தொழில் இங்க இந்த தொழில் என்று எப்போதும் பேசிக்கொண்டே இருப்பார். வங்கியில் கடன் அதை சரியாக கட்டமுடியாத சூழல். இருந்தாலும் நாளை என்பதை சமாளித்து கொள்ளலாம் என்ற தன்னம்பிக்கையில் வாழ்க்கையை இனிதானதாய் ஆக்கி நாளை கடப்பார்.

இதேபோன்று நாளை நமக்கானதே என்கிற கணக்கிலும், இதுவும் கடந்து போகும் என்கிற வசனத்தை பேசி வீட்டுக்கடன், கார் கடன், தொழில் கடன் என வாங்கி வாழ்க்கையை நகர்த்தும் நிறைய மனிதர்கள் நம்மை சுற்றி வாழ்வாதாரத்தை வெற்றி பெற வைப்பதற்காக ஓடுகிறார்கள்.

காலை வந்ததும் எல்லையற்று ஓடும் அனைவரும் வீட்டில் யார் தடுத்தாலும் அவர்களுக்கும்
சேர்த்தும் ஓடுவதாக சொல்லிவிட்டு ஓடுகிறார்கள்.

ஓடுவதன் நோக்கம் நன்றாக இருப்பதாக சொல்வதால் ஓடுவது என்பது தொடர்கிறது.சிறிய வயதில் படிப்பிற்காய் ஓடி,படித்து முடித்து வேலையை நோக்கி ஓடி, வேலையில் தினமும் உழைப்பிற்காய் ஓடி,வேலைக்குப்பின் வங்கியில் பணத்தை சேமிக்க ஓடி, சேமிப்பிற்குப் பின் திருமணம் செய்து குடும்பம் நடத்த ஓடி, குழந்தைகளுக்காய் ஓடி, வருமானம் போதவில்லை தொழில் செய்யலாமென வியாபாரம் செய்ய ஓடி,  இப்படி ஓயாமல் ஓட ஓட பணம் வர வர என்ன செய்ய, வாடகை வீடு வேண்டாம்,

ஒரு பங்களா வீடு அது பத்தாதுன்னு பண்ணை வீடு,கெளரவத்தை மேம்படுத்த வேலை செய்யும்போது வாங்கின டூ வீலர் வீட்டில் கிடக்க, நிறைய விலை கொடுத்து  வெளிநாட்டுக்காரு, அப்புறம் மனைவிக்கு நகைக்கடை, மகன் மகளுக்கு நாலு தலைமுறை உட்கார்ந்து சாப்பிட பல ஊர்கள் என, பார்த்த இடத்தையெல்லாம் வாங்கி,  அப்புறம் பதவிக்காக அரசியலை வாங்கி, அதை பராமரிக்க கௌரவத்திற்காக மக்களை வாங்கி,  கூடவே முதுமையில நிறைய வியாதிகளையும் வாங்கிக்கொண்டு இருப்பதை  காக்க, இன்னும் வாங்க ஓடுற கூட்டத்தை இன்னும் நான் பார்க்கிறேன்.

அவுங்களும் ஓடுவதை ஒருகாலும் நிறுத்தவேயில்லை. அப்பா அம்மா அன்பைப் பெறமால், உற்றார் உறவினரிடமிருந்து விலகி கை நனைக்க ஓரிடம், வாய் ருசிக்க வேறிடம், ஆடை மாற்ற ஓரிடம், ஆளை மாற்ற வேறிடம் இப்படியாக மனிதனின் ஓட்டமானது எல்லையற்றுப் போய் விட்டது.

சரி, நண்பருடன் பேசிய கதைக்கு வருகிறேன். அவர் சொன்னாரு, என்னங்க இந்த கொரோனா நம்மள ஒரே எடத்தில கட்டி போட்டுடுச்சு. எங்கேயும் போறதில்லங்க. தென்னந்தோப்பை ஒரு ரவுண்டு வருவேன். மத்தியானம் நல்ல சாப்பாடு. அப்புறம் குட்டி தூக்கம். சாயங்காலம் வீட்ல உறவுகளோடு இழந்த நாட்களை மகிழ்வா பேசி அரட்டை.  இதுக்கு ஒண்ணும் பெருசா பணம் தேவையில்லிங்க. தெனமும் கொஞ்சம் காய்கறி வாங்க காசு, சாப்பாட்டுக்கு இருக்கவே இருக்கு ரேஷன் அரிசி, இது போதுங்க என்றார் சிரிப்போடு.

தேவையில்லாம முதலீடு, கடன் தொழில், மண்ணாங்கட்டியாவது. நிம்மதியா இருக்கேங்க. இந்த கொரோனா என்னுடைய பேராசையை பெருசா யோசிக்க வச்சிருச்சுங்க என்று முடித்தார். இந்த வருட ஆரம்பத்தில் ஒருவர் கூட நினைத்திருக்க மாட்டார்கள். இயற்கை இப்படியொரு மாற்றத்தை தந்து வாழ்க்கையை புரட்டி போடுமென்று. நண்பரைப்போல் நிறையப்பேர் இந்த பூட்டப்பட்ட நாட்களில் அந்த சிந்தனைக்கு வந்து விட்டார்கள்.

இந்த கருத்துக்கூட சிலரால் ஏற்றுக்கொள்ளப்படாது. பொழைக்கத் தெரியாதவன் பொறாமையில பினாத்துறான்னு சொன்னக் கூட பரவாயில்லை. பூட்டிய வீட்டுக்குள் இருந்து கொண்டு இளமையில நீங்க ஓடி ஓடி சம்பாதிச்ச எல்லாத்தையும் கண்ணுக்கு தெரியாத வைரஸ் ஒண்ணு வந்து தனிமைப்படுத்தி வாழ்க்கைய கத்து கொடுக்குமுன்னு நேத்து வரைக்கும் யாரு நெனக்கல.

அதுனாலே ரொம்ப ஓடாதீங்க எங்கேயாவது ஒரு எடத்தில உங்க ஓட்டம் நிறுத்தப்படனும். நீங்க இழந்த நேயங்களை திரும்ப பெறனும். அதுக்கு ஒரு முற்றுப்புள்ளிதான் இப்ப உலகத்தை ஆட்டிப் படைக்கிற இந்த தொற்றுப்புள்ளிங்கிறதை நம்புங்க.

– கோவிந்த்.நீலகண்டன்

A1TamilNews.com

From around the web