அமெரிக்காவிலும் சீன செயலிகளுக்கு தடை! டிரம்ப் அதிரடி அறிவிப்பு!

இந்திய சீன எல்லையில் நடைபெற்ற மோதலை அடுத்து நாட்டின் பாதுகாப்பை உறுதி செய்யும் பொருட்டு சீனச்செயலிகளான டிக்டாக், வீசாட், ஹலோ போன்ற 106 செயலிகள் தடை செய்யப்பட்டுள்ளன. இந்தியாவின் இந்த முடிவை அமெரிக்கா வரவேற்றது. இந்நிலையில்,சீன செயலிகளால் தேசப் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் இருப்பதாகவும் அதனால் அமெரிக்காவிலும் டிக்டாக்கிற்கு விரைவில் தடை விதிக்கப்படும் எனவும் அமெரிக்க அதிபர் டிரம்ப் ஏற்கனவே அறிவித்திருந்தார். இதன்படி சீன செயலிகளான டிக்டாக், வீசாட் ஆகியவற்றிற்கு அமெரிக்காவில் தடை விதித்து டிரம்ப் உத்தரவிட்டார். இந்த
 

அமெரிக்காவிலும் சீன செயலிகளுக்கு தடை!  டிரம்ப் அதிரடி அறிவிப்பு!ந்திய சீன எல்லையில் நடைபெற்ற மோதலை அடுத்து நாட்டின் பாதுகாப்பை உறுதி செய்யும் பொருட்டு சீனச்செயலிகளான டிக்டாக், வீசாட், ஹலோ போன்ற 106 செயலிகள் தடை செய்யப்பட்டுள்ளன. இந்தியாவின் இந்த முடிவை அமெரிக்கா வரவேற்றது.

இந்நிலையில்,சீன செயலிகளால் தேசப் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் இருப்பதாகவும் அதனால் அமெரிக்காவிலும் டிக்டாக்கிற்கு விரைவில் தடை விதிக்கப்படும் எனவும் அமெரிக்க அதிபர் டிரம்ப் ஏற்கனவே அறிவித்திருந்தார்.

இதன்படி சீன செயலிகளான டிக்டாக், வீசாட் ஆகியவற்றிற்கு அமெரிக்காவில் தடை விதித்து டிரம்ப் உத்தரவிட்டார். இந்த அறிவிப்பு நடைமுறைக்கு வர 45 நாட்களாகும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சீன தயாரிப்புக்கள் அமெரிக்கா முழுவதும் பரவிக் கிடக்கின்றன. இவைகளால் தேசப் பாதுகாப்பு, வெளியுறவுக் கொள்கை, நாட்டின் பொருளாதார வளர்ச்சி இவை தடைபடும் அபாயம் உள்ளது எனவும், குறிப்பாக சீனாவின் டிக்டாக் செயலி, அதைப் பயன்படுத்துவோரின் தகவல்களை தானாகவே அபகரித்துக் கொள்கிறது.

அமெரிக்க மக்களின் தனிப்பட்ட விவரங்கள், சொத்து விவரங்கள் அமெரிக்க மக்களின், அதிகாரிகளின், ஒப்பந்ததாரர்களின் தனிப்பட்ட விவரங்களை அறியவும், அவர்களின் நடமாட்டதைத் கண்காணிக்கவும், மிரட்டவும் முடியும்.இதன் காரணமாக இந்த தடை உத்தரவு பிறப்பிக்கப்படுகிறது என டிரம்ப் விளக்கம் அளித்துள்ளார்.

A1TamilNews.com

From around the web