டிக் டாக் உள்ளிட்ட 59 மொபைல் ஆப் களுக்கு மத்திய அரசு தடை!

சீன நிறுவனங்களின் மொபைல் ஆப் களுக்கு மத்திய அரசு தடை விதித்துள்ளது. டிக் டாக், யுசி ப்ரௌசர் உள்ளிட்ட 59 மொபைல் ஆப் களுக்கு இந்த தடை பொருந்தும். இந்திய இறையாண்மை, ஒருமைப்பாடு மற்றும் ராணுவத்திற்கு அச்சுறுத்தலாக இருப்பதால் மத்திய அரசு இந்த முடிவை எடுத்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த மொபைல் ஆப் கள் மூலம் தனிநபர் தகவல்கள் திருடப்பட்டு இந்தியாவுக்கு வெளியே உள்ள சர்வர்களுக்கு அனுப்படுவதாக வந்த பல்வேறு புகார்களை அடுத்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.
 

டிக் டாக் உள்ளிட்ட 59 மொபைல் ஆப் களுக்கு மத்திய அரசு தடை!சீன நிறுவனங்களின் மொபைல் ஆப் களுக்கு மத்திய அரசு தடை விதித்துள்ளது. டிக் டாக், யுசி ப்ரௌசர் உள்ளிட்ட 59 மொபைல் ஆப் களுக்கு இந்த தடை பொருந்தும்.

இந்திய  இறையாண்மை, ஒருமைப்பாடு மற்றும் ராணுவத்திற்கு அச்சுறுத்தலாக இருப்பதால் மத்திய அரசு இந்த முடிவை எடுத்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த மொபைல் ஆப் கள் மூலம் தனிநபர் தகவல்கள் திருடப்பட்டு இந்தியாவுக்கு வெளியே உள்ள சர்வர்களுக்கு அனுப்படுவதாக வந்த பல்வேறு புகார்களை அடுத்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

Tik Tok, UC Browser, Shareit, Kwai, Baidu Map உள்பட 59 மொபைல் ஆப்கள் தடை செய்யப்பட்டுள்ளன. சைபர் பிரிவுக்கும் உள்துறை அமைச்சகத்திற்கும் இந்த ஆப்களை தடை செய்வதற்கான பரிந்துரைகள் அனுப்பப்பட்டுள்ளன. கோடிக்கணக்கான இந்தியர்களின் தகவல்கள் திருடப்படுவதை தடுக்கவும் இந்தியாவின் சைபர் தளம் பாதுகாப்பாகவும் இறையாண்மையை பேணுவதற்காகவும் இந்த நடவடிக்கை தேவைப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

A1TamilNews.com

 

From around the web