இனி அரசுப்  பேருந்துகளில்  PAYTM ல் டிக்கெட் எடுக்கலாம்!  அமைச்சர் அறிவிப்பு!

கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த அறிவிக்கப்பட்டிருந்த ஊரடங்கு தமிழகத்தில் சென்னை உட்பட குறிப்பிட்ட மாவட்டங்கள் தவிர்த்து மற்ற மாவட்டங்களில் இன்று முதல் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பியது. இதனால் நேற்ற்u காலை முதலே அரசுப் பேருந்துகள் மாவட்டங்களுக்குள் இயக்கப்பட்டன. 60 சதவீத பயணிகளுடன், சமூக விலகலைக் கடைப்பிடித்து பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. பேருந்து கட்டண உயர்வு கிடையாது. பழையப் பேருந்து கட்டணங்களே வசூலிக்கப்பட்டு வரும் நிலையில் இனி அரசுப் பேருந்துகளில் பேருந்து கட்டணங்களை PAYTM மூலம் செலுத்தலாம் என அமைச்சர்
 

இனி அரசுப்  பேருந்துகளில்  PAYTM ல் டிக்கெட் எடுக்கலாம்!  அமைச்சர் அறிவிப்பு!கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த அறிவிக்கப்பட்டிருந்த ஊரடங்கு தமிழகத்தில் சென்னை உட்பட குறிப்பிட்ட  மாவட்டங்கள் தவிர்த்து மற்ற மாவட்டங்களில்  இன்று முதல் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பியது.

இதனால் நேற்ற்u காலை முதலே அரசுப் பேருந்துகள் மாவட்டங்களுக்குள் இயக்கப்பட்டன. 60 சதவீத பயணிகளுடன், சமூக விலகலைக் கடைப்பிடித்து பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன.

பேருந்து கட்டண உயர்வு கிடையாது. பழையப் பேருந்து கட்டணங்களே வசூலிக்கப்பட்டு வரும் நிலையில் இனி அரசுப் பேருந்துகளில் பேருந்து கட்டணங்களை  PAYTM மூலம் செலுத்தலாம் என அமைச்சர் விஜய பாஸ்கர் அறிவித்துள்ளார்.

இது தவிர பொதுத் தேர்வு எழுத இருக்கும் மாணவர்களுக்கு  சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார். மேலும் ஊரடங்கு காலத்தில் பேருந்து ஊழியர்களுக்கு பிடித்தம் எதுவும் இல்லாமல் ஊதியம் வழங்கப்பட்டுள்ளதாகவும் அறிவித்துள்ளார்.

A1TamilNews.com

From around the web