காமராஜர் சிலை அவமதிப்பு! குண்டர் சட்டத்தில் 3 பேர் கைது!1

சேலம் மாநகரில் காமராஜர் சிலைக்கு செருப்பு மாலை அணிவித்த மூன்று பேர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர். தேக்கம்பட்டியைச் சேர்ந்த மூன்று பேர்.மே மாதம் 7ம் தேதி காமராஜர் சிலைக்கு செருப்பு மாலை போட்டு அவமரியாதை செய்தனர். சேலம் மேற்கு பகுதி உதவி ஆணையர் ஜே.நாகராஜன் தலைமையிலான படையினர் விரைந்து செயல்பட்டு, காமராஜர் சிலையை அவமதித்த 22 வயதான அரவிந்தன், வெற்றிவேல் மற்றும் சுகவனேஸ்வரன் ஆகிய மூவரையும் உடனடியாக கைது செய்தனர். மூன்று பேரையும் குண்டர் சட்டத்தில் கைது
 

காமராஜர் சிலை அவமதிப்பு! குண்டர் சட்டத்தில் 3 பேர் கைது!1சேலம் மாநகரில் காமராஜர் சிலைக்கு செருப்பு மாலை அணிவித்த மூன்று பேர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

தேக்கம்பட்டியைச் சேர்ந்த மூன்று பேர்.மே மாதம் 7ம் தேதி காமராஜர் சிலைக்கு செருப்பு மாலை போட்டு அவமரியாதை செய்தனர். 

சேலம் மேற்கு பகுதி உதவி ஆணையர் ஜே.நாகராஜன் தலைமையிலான படையினர் விரைந்து செயல்பட்டு, காமராஜர் சிலையை அவமதித்த 22 வயதான அரவிந்தன், வெற்றிவேல் மற்றும் சுகவனேஸ்வரன் ஆகிய மூவரையும் உடனடியாக கைது செய்தனர்.

மூன்று பேரையும் குண்டர் சட்டத்தில் கைது செய்ய வேண்டும் என்றும்உதவி ஆணையர் நாகராஜன், சேலம் மாநகர போலீஸ் கமிஷனர் செந்தில் குமாருக்கு பரிந்துரை செய்தார். பரிந்துரையை ஏற்றுக் கொண்ட கமிஷனர் செந்தில் குமார், அதற்கான உத்தரவைப் பிறப்பித்தார்.

கமிஷனரின் உத்தரவு நகல் ஓமலூர் சப்-ஜெயிலில் உள்ள மூன்று குற்றவாளிகளுக்கும் கொடுக்கப்பட்டது. இந்த மூவர் மீதும் கருப்பூர் மற்றும் சூரமங்கலம் காவல் நிலையங்களிலும் புகார்கள் நிலுவையில் இருப்பதாகவும் கமிஷனர் தெரிவித்துள்ளார்.

A1TamilNews.com

From around the web