பொதுமக்களுடன் கனிவுடன் நடக்க வேண்டும்! போலீசாருக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி!!

சாத்தான்குளம் சம்பவத்தைத் தொடர்ந்து தமிழக காவல்துறையில் சில அதிரடியான மாற்றங்கள் அமல்படுத்தப்பட்டு வருகின்றன. நெல்லை சரகத்தில் ஃப்ரெண்ட்ஸ் ஆப் போலீஸுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் சில மாவட்டங்களிலும் இந்தத் தடை அமல்படுத்தப் பட்டுள்ளது. தூத்துக்குடி மாவட்ட எஸ்.பி. ஆக இருந்த அருண்கோபாலன் காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டு, புதிய எஸ்.பி ஆக ஜெயக்குமார் பதவியேற்றுள்ளார். உடனடியாக தூத்துக்குடி எஸ்.பி அலுவலகத்தில் போலீசாருக்கான திறன் மேம்பாட்டு பயிற்சியை நடத்தியுள்ளார் ஜெயக்குமார். இந்த பயிற்சிக்கு தலைமை தாங்கிப் பேசிய மாவட்ட எஸ்.பி.
 

பொதுமக்களுடன் கனிவுடன் நடக்க வேண்டும்! போலீசாருக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி!!சாத்தான்குளம் சம்பவத்தைத் தொடர்ந்து தமிழக காவல்துறையில் சில அதிரடியான மாற்றங்கள் அமல்படுத்தப்பட்டு வருகின்றன. நெல்லை சரகத்தில் ஃப்ரெண்ட்ஸ் ஆப் போலீஸுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் சில மாவட்டங்களிலும் இந்தத் தடை அமல்படுத்தப் பட்டுள்ளது.

தூத்துக்குடி மாவட்ட எஸ்.பி. ஆக இருந்த அருண்கோபாலன் காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டு, புதிய எஸ்.பி ஆக ஜெயக்குமார் பதவியேற்றுள்ளார். உடனடியாக தூத்துக்குடி எஸ்.பி அலுவலகத்தில் போலீசாருக்கான திறன் மேம்பாட்டு பயிற்சியை நடத்தியுள்ளார் ஜெயக்குமார்.

இந்த பயிற்சிக்கு தலைமை தாங்கிப் பேசிய மாவட்ட எஸ்.பி. ஜெயக்குமார் கூறியதாவது,
 
“பொதுமக்களிடம் கனிவுடன் நடந்து கொள்ள வேண்டும். சட்டத்துக்கு உட்பட்டே பணிகளை மேற்கொள்ள வேண்டும். பொதுமக்களிடன் புகார்களுக்கு கால தாமதம் இல்லாமல் உடனடியாக சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும்.
 
எதிரிகளை கைது செய்யும்போது உச்ச நீதிமன்ற கட்டளைகளை கடைப்பிடிக்க வேண்டும்.  மன அழுத்தமும் இல்லாமல் பணியாற்றுவதற்கு உரிய வழிமுறைகளை கடைப்பிடிக்க வேண்டும்.
 
தற்போது கொரோனா தொற்று அதிகமாக உள்ளது. ஆகையால் போலீசார் முககவசம் அணிதல், சமூக இடைவெளியை கடைபிடித்தல், அடிக்கடி கைகளை சோப்பு, கிருமிநாசினி போட்டு சுத்தம் செய்ய வேண்டும்,” என்று கூறியுள்ளார்.
 
சாத்தான்குளம் சம்பவத்தால் பொதுமக்கள் மத்தியில் போலீசாருக்கு ஏற்பட்டுள்ள அவப்பெயரை மாற்றும் வகையில், புதிய மாவட்ட எஸ்.பி. ஜெயக்குமார் அதிரடி நடவடிக்கைகளை எடுப்பார் என்று கூறப்படுகிறது.
 
 

From around the web