போலீஸ் வெறுப்பு ! ஊரார் முன்பு ஒதுக்கி வைக்கும் அவமரியாதை இது!!

போலீஸார் வீடுகளுக்கு பால் விநியோகம் செய்யப்போவதில்லை என்பது நடைமுறையில் சாத்தியமே இல்லாத ஒன்று. ஆனால், பால் முகவர்களின் இந்த போராட்ட அறிவிப்பு போலீஸ்களை உலுக்கி இருக்கும். போலீஸ் சர்வீஸ் வரலாற்றில் இப்படியொரு பகிரங்கமான எதிர்ப்பை பார்த்திருக்க மாட்டார்கள். சரியாக சொல்லலாம் என்றால் ஊரார் முன்பு ஒதுக்கி வைக்கும் அவமரியாதை இது. போலீஸ் குடும்பங்களுக்கு எந்த வழியிலும் பால் கிடைக்கவே போகிறது. இதை மீறி பொதுவில் உங்களுக்கு எல்லாம் பால் கிடையாது என்கிற அவலத்தை சுமந்துகொண்டு டீ’ குடிப்பது
 

போலீஸ் வெறுப்பு ! ஊரார் முன்பு ஒதுக்கி வைக்கும் அவமரியாதை இது!!போலீஸார் வீடுகளுக்கு பால் விநியோகம் செய்யப்போவதில்லை என்பது நடைமுறையில் சாத்தியமே இல்லாத ஒன்று. ஆனால், பால் முகவர்களின் இந்த போராட்ட அறிவிப்பு போலீஸ்களை உலுக்கி இருக்கும். போலீஸ் சர்வீஸ் வரலாற்றில் இப்படியொரு பகிரங்கமான எதிர்ப்பை பார்த்திருக்க மாட்டார்கள். சரியாக சொல்லலாம் என்றால் ஊரார் முன்பு ஒதுக்கி வைக்கும் அவமரியாதை இது.

போலீஸ் குடும்பங்களுக்கு எந்த வழியிலும் பால் கிடைக்கவே போகிறது. இதை மீறி பொதுவில் உங்களுக்கு எல்லாம் பால் கிடையாது என்கிற அவலத்தை சுமந்துகொண்டு டீ’ குடிப்பது தீக்குளிப்பதற்கு சமம். நிறைய போலீஸ் குடும்பங்களை சேர்ந்த வாரிசுகள் சொந்த பந்தங்கள் காவலர்களுக்கு இழைக்கப்படும் இந்த அநீதி சரியா? என்று இதே ஃபேஸ்புக்கில் கேள்வி எழுப்புகிறார்கள்.

அவர்களிடத்தில் ஒரே கேள்வியைதான் கேட்க நினைக்கிறேன். எப்போதாவது ஒரு நாளில் சம்பளம் பணம் இல்லாத ஒரு நூறுரூபாயை எப்படி சம்பாதிக்கிறீர்கள் என்று போலீஸ் தகப்பனையோ, கணவனையோ, சகோதர,சகோதரிகளையோ நீங்கள் கேட்டு இருக்கிறீர்களா?

எப்போதாவது ஒரு நாளில் உங்க அதிகாரத்தை சரியாக பயன்படுத்தி எவ்வித அத்துமீறல் இல்லாத மனசாட்சியுடன் கூடிய பணியைத் தான் பொதுமக்களுக்கு செய்கிறீர்களா? என்று உங்கள் போலீஸ் ரத்த பந்தங்களை கண்டிப்புடன் கூட தேவையில்லை சிரித்தவாறாக கேட்டிருக்கிறீர்களா?

இதெல்லாம் கூட தேவையில்லை. போலீஸ் ஸ்டேசன் வரும் குற்றவாளி இல்லாத பொதுமக்களை கண்ணியமாக நடத்தி இருக்கிறீர்களா என்பதை கேட்டு இருக்கிறீர்களா? குறைந்தபட்சம் அவர்களை உட்கார வைத்து பேசி இருக்கிறீர்களா? என்று கேட்டு இருப்பீர்களா? பொதுவாழ்வில் போலீஸ் அதிகார திமிரால் வெளியே சொல்ல முடியாத அவமானத்தை பெற்று தாங்கிகொள்ளும் இயலாமை எத்தனையோ சாமானிய மக்களை தூங்கவிடாமல் செய்து இருக்கிறது தெரியுமா?

ஒன்று மட்டும் நன்றாக புரிந்து கொள்ளுங்கள். போலீஸ் வெறுப்புகள் தோன்றுவது சட்டத்தை மீறி சலுகைகள் கிடைக்கவில்லை என்பதால் அல்ல. சட்டத்திற்கு உட்பட்ட அடிப்படை உரிமைகள் போலீஸ்களால் நசுக்கப்படுவதால் மட்டுமே வெளியே சொல்ல முடியாத ஒரு வெறுப்பு பொதுமக்களின் உள்ளுக்குள் சுழன்று கொண்டிருக்கிறது. அந்த வெறுப்புகளில் ஒன்றே போலீஸ்களுக்கு பால் இல்லை என்பதும்.

– பா.வெங்கடேசன்

A1TamilNews.com

From around the web