திருப்பதியில் பக்தர்களுக்கு தரிசனம் எப்போது? முதல்வர் ஜெகன் ரெட்டியின் முடிவுக்கு காத்திருக்கும் கோயில் நிர்வாகம்!

ஊரடங்கு அமல்படுத்தப்பட்டவுடன் நாடு முழுவதும் உள்ள கோயில்கள், தேவாலயங்கள், மசூதிகள் மூடப்பட்டன. தற்போது அமல்படுத்தப்பட்டுள்ள 5ம் கட்ட ஊரடங்கின் போது பல தளர்வுகளை மத்திய அரசு அறிவித்துள்ளது. அதன் படி கோயில்கள், தேவாலயங்கள், மசூதிகளுக்கு பக்தர்களை மாநில அரசுகள் முடிவின் படி அனுமதிக்கலாம் என்று கூறப்பட்டுள்ளது. திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பக்தர்களை அனுமதிப்பது தொடர்பாக ஆந்திர மாநில அரசு இன்னும் முடிவு அறிவிக்கவில்லை. அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையும் எடுக்கப்பட்டு தயார் நிலையில், அரசின் உத்தரவுக்காக காத்திருப்பதாக கோயில்
 

திருப்பதியில் பக்தர்களுக்கு தரிசனம் எப்போது? முதல்வர் ஜெகன் ரெட்டியின் முடிவுக்கு காத்திருக்கும் கோயில் நிர்வாகம்!ரடங்கு அமல்படுத்தப்பட்டவுடன் நாடு முழுவதும் உள்ள கோயில்கள், தேவாலயங்கள், மசூதிகள் மூடப்பட்டன. தற்போது அமல்படுத்தப்பட்டுள்ள 5ம் கட்ட ஊரடங்கின் போது பல தளர்வுகளை மத்திய அரசு அறிவித்துள்ளது.

அதன் படி கோயில்கள், தேவாலயங்கள், மசூதிகளுக்கு பக்தர்களை மாநில அரசுகள் முடிவின் படி அனுமதிக்கலாம் என்று கூறப்பட்டுள்ளது. திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பக்தர்களை அனுமதிப்பது தொடர்பாக ஆந்திர மாநில அரசு  இன்னும் முடிவு அறிவிக்கவில்லை.

அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையும் எடுக்கப்பட்டு தயார் நிலையில், அரசின் உத்தரவுக்காக காத்திருப்பதாக கோயில் நிர்வாகத்தின் தரப்பில் கூறப்பட்டுள்ளது. 6 முதல் 8 அடி தூரம் வரை சமூக இடைவெளியை கடைப்பிடிப்பதற்காக, கோவிலுக்கு செல்லும் வழி எல்லாம் ஸ்டிக்கர் ஒட்டி வைக்கப்பட்டுள்ளது.

திருப்பதியில் இருந்து திருமலைக்கு செல்லும் பக்தர்களுக்கும், திருமலையில் வரிசையில் செல்லும் பக்தர்களுக்கும் தெர்மல் ஸ்கேனர் மூலம் பரிசோதனை செய்யவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. முகக் கவசம் மற்றும் கையுறைகள் கட்டாயம் அணிய வேண்டும் என்ற நிபந்தனைகளை மீறுபவர்கள் அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்றும் நிர்வாகத் தரப்பில் கூறப்பட்டுள்ளது.

ஆந்திர அரசின் உத்தரவு வந்தவுடன் பக்தர்கள் திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்குள் அனுமதிக்கப்படுவார்கள்.

A1TamilNews.com

From around the web