இந்தியாவின் முதன்மை நூலாக திருக்குறள்.. மாஃபா பாண்டியராஜன் கோரிக்கை!

இந்தியாவின் முதன்மை நூலாக திருக்குறளை அறிவிக்க வேண்டும் என்று மத்திய அரசுக்கு மாஃபா பாண்டியராஜன் கோரிக்கை விடுத்துள்ளார். தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் பன்னிரண்டாவது பட்டமளிப்பு விழா ஆளுநர் பன்வாரிலால் புரோகித் தலைமையில் நடைபெற்றது. 10 ஆயிரத்து 421 மாணவர்களுக்கு பட்டங்கள் வழங்கப்பட்டன. இந்த பட்டமளிப்பு விழாவில் மொரீசியஸ் நாட்டின் முன்னாள் அமைச்சரும் உலக திருக்குறள் மைய நிறுவனருமான ஆறுமுகம் பரசுராமன் உள்ளிட்டோருக்கு டாக்டர் பட்டங்களும் வழங்கப்பட்டன. விழாவில் பங்கேறுப் பேசிய தமிழ் வளர்ச்சித் துறை அமைச்சர் மாஃபா பாண்டியராஜன்,
 

இந்தியாவின் முதன்மை நூலாக திருக்குறள்.. மாஃபா பாண்டியராஜன் கோரிக்கை!ந்தியாவின் முதன்மை நூலாக திருக்குறளை அறிவிக்க வேண்டும் என்று மத்திய அரசுக்கு மாஃபா பாண்டியராஜன் கோரிக்கை விடுத்துள்ளார்.

தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகத்தின்  பன்னிரண்டாவது பட்டமளிப்பு விழா ஆளுநர் பன்வாரிலால் புரோகித் தலைமையில் நடைபெற்றது. 10 ஆயிரத்து 421 மாணவர்களுக்கு பட்டங்கள் வழங்கப்பட்டன. இந்த பட்டமளிப்பு விழாவில்  மொரீசியஸ் நாட்டின் முன்னாள் அமைச்சரும் உலக திருக்குறள் மைய நிறுவனருமான ஆறுமுகம் பரசுராமன் உள்ளிட்டோருக்கு டாக்டர் பட்டங்களும் வழங்கப்பட்டன.
 
விழாவில் பங்கேறுப் பேசிய தமிழ் வளர்ச்சித் துறை அமைச்சர் மாஃபா பாண்டியராஜன், “மொரீசியஸ் முன்னாள் அமைச்சர் பரசுராமன் திருக்குறளை உலகத்தின் முதன்மை நூலாக அறிவிக்க வேண்டும் என்று யுனெஸ்கோ அமைப்பிற்கு கோரிக்கை விடுத்துள்ளார். இன்னும் பலரும் இத்தகைய கோரிக்கையை விடுத்து வருகிறார்கள். அதற்கு நல்லதொரு தொடக்கமாக இந்தியாவின் முதன்மை நூலாக திருக்குறளை அறிவிக்க வேண்டும் என்று மத்திய அரசுக்கு கோரிக்கை விடுக்கிறோம்,” என்று பேசினார்.
 
தமிழ் மொழி மீது காதல் கொண்டுள்ள பிரதமர் மோடி, அமைச்சர் மாஃபா பாண்டியராஜனின் கோரிக்கையை நிறைவேற்றுவாரா?
 
– வணக்கம் இந்தியா 
 

From around the web