அச்சம் தவிர்ப்போம்… அய்யன் வள்ளுவர் வழியில் தெளிவோம்! ஆன்லைனில் மறையோதல்!

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பரவி வருவதால் ஒரு வித பதட்டநிலையும் அச்சமும் ஏற்பட்டுள்ளது. அமெரிக்காவில், அரசு உத்தரவுகளால் 5 பேரில் ஒருவர் வீட்டுக்குள்ளேயே முடங்கிக் கிடக்கிறார்கள். பொருளாதாரம் என்னவாகும்?, வேலைக்குப் பிரச்சனை ஏற்படுமா என்ற அடுத்தக்கட்டம் பற்றிய சிந்தனையும் எழுந்துள்ளது. இந்த நிலையில் அமெரிக்காவில்பல்கலைக்கழங்கள், நிறுவனங்கள், தமிழ்ச் சங்கங்கள், இந்திய அமைப்புகள் என பல்வேறு அமைப்புகள் மூலமாகவும் தனியாகவும் திருமூலர் வழியில் மூச்சுப் பயிற்சி வகுப்புகள் நடத்தி வரும் டாக்டர்.சுந்தர் பாலசுப்ரமணியன் புதிய முயற்சியில் ஈடுபட்டுள்ளார்.
 

அச்சம் தவிர்ப்போம்… அய்யன் வள்ளுவர் வழியில் தெளிவோம்! ஆன்லைனில் மறையோதல்!லகம் முழுவதும் கொரோனா வைரஸ் பரவி வருவதால் ஒரு வித பதட்டநிலையும் அச்சமும் ஏற்பட்டுள்ளது. அமெரிக்காவில், அரசு உத்தரவுகளால் 5 பேரில் ஒருவர் வீட்டுக்குள்ளேயே முடங்கிக் கிடக்கிறார்கள். பொருளாதாரம் என்னவாகும்?, வேலைக்குப் பிரச்சனை ஏற்படுமா என்ற அடுத்தக்கட்டம் பற்றிய சிந்தனையும் எழுந்துள்ளது.

இந்த நிலையில் அமெரிக்காவில்பல்கலைக்கழங்கள், நிறுவனங்கள், தமிழ்ச் சங்கங்கள், இந்திய அமைப்புகள் என பல்வேறு அமைப்புகள் மூலமாகவும் தனியாகவும் திருமூலர் வழியில் மூச்சுப் பயிற்சி வகுப்புகள் நடத்தி வரும் டாக்டர்.சுந்தர் பாலசுப்ரமணியன் புதிய முயற்சியில் ஈடுபட்டுள்ளார்.

ஆன்லைன் மூலம் “திருக்குறள் மறையோதல் “ என்ற இந்த இலவச நிகழ்ச்சியை நடத்துகிறார்.  இது குறித்து கேட்டறிந்த போது “மனக் கலக்கத்தில் முடங்கிக் கிடக்கும் இந்தத் தெளிவில்லாத போழ்தில் யாம் இறைவனாரின் திருக்குறளிலே ஒரு சொல் நம்மைத் தெளிவிக்கும் என்ற எதிர்பார்ப்பில் அனைவரும் சூம் செயலியில் கூடிப் பாடுவதற்கான திட்டம்,” என்று தெரிவித்தார்.

மறைமொழியின் வடிவில், அதாவது வேதம் ஓதும் ராகத்தில் இது அனைவராலும் பாடப்படும். இது பயிலவும், மனப்பாடம் செய்யவும், பொருளைப் புரிந்து அனுபவிக்கவும் பயன்படும். அனைவரும் எளிதில் ஓதலாம். உணரலாம். திருக்குறளின் எளிமை அனைவருக்குமானது. முன் அனுபவம் தேவையில்லை என்றும் கூறினார்.

ஞாயிறு, மார்ச் 22, அமெரிக்கக் கிழக்கு நேரம் 10 மணி முதல் 11 மணி வரை  மூன்று வாரங்களில் அனைத்து திருக்குறளும் ஓதப்படும். அறத்துப்பால் இந்த வாரம் ஓதப்படும். அடுத்த இரு வாரங்களில் பொருட்பாலும் காமத்துப்பாலும் ஓதப்படும்.  

“திருக்குறள் உலகப் பொதுமறையாகும். இதனை முற்றிலும் ஓதுவது மனநலம், உடல்நலம், அறிவாற்றல் ஆகியவற்றை மேம்படுத்தும் மறைகளை ஓதுவது நுரையீரலுக்குச் சிறந்த பயிற்சியுமாகும். பனைநிலத் தமிழ்ச் சங்கத்தின் வழியே இதனை முன்பு முழுவதுமாக ஓதிப் பதிவு செய்திருக்கிறோம். இம்முறைப்படி மறைகளின் பண் அமைப்பில் இதனை ஓத இருக்கிறோம். கட்டணம் கிடையாது. அனைவரும் கலந்துகொள்ளலாம்,” என்று டாக்டர். சுந்தர் பாலசுப்ரமணியன் தெரிவித்துள்ளார்.

பங்கேற்க விரும்புகிறவர்கள் https://zoom.us/webinar/register/WN_hUfmj5uIRNOAjYlr0wWB9g என்ற இணையத்தள முகவரியில் முன்பதிவு செய்ய வேண்டும். கட்டணமில்லா இலவச பயிற்சி ஆகும். பொதுவாக தமிழ்ச்சங்கக் கூட்டங்களிலும், பள்ளி நிகழ்வுகளிலும் கூடி ஓதுப்படும் இந்த நிகழ்ச்சி இப்போதைய நிலையில் சாத்தியமில்லை என்பதால் இணையத்தில் கூடி ஓதுகிறார்கள்.

இந்தியாவிலிருந்தும் பங்கேற்க முடியும். இந்திய நேரப்படி ஞாயிற்றுக் கிழமை இரவு 7:30 மணிக்கு இந்த மறையோதல் நிகழ்ச்சி தொடங்கும்.

http://www.A1TamilNews.com

 

From around the web