ஆவின் பால் பாக்கெட்டுகளில் இனி திருக்குறள்

ஆவின் பால் பாக்கெட்டுகளில் இனி திருக்குறள் அச்சிடப்படும் என பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தெரிவித்துள்ளார். தஞ்சை மாவட்டம் பிள்ளையார்பட்டி அருகே உள்ள திருவள்ளுவர் சிலை அவமதிக்கப்பட்டதற்கு பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டங்களை முன்னெடுத்தனர். அதன்பிறகு அவமதிக்கப்பட்ட சிலை கூண்டுவைத்து பாதுகாப்பாக வைக்கப்பட்டது. இந்நிலையில் ஆவின் பால் பாக்கெட்டுகளில் திருக்குறள் அச்சிடபடுவதற்காக முதல்வரின் ஒப்புதலை பெற உள்ளதாகவும் அவர் கூறினார். திருக்குறளை ஆவின் பால் பைகளில் அச்சிட்டு வழங்குவதன் மூலம் ஒவ்வொரு இல்லங்களிலும் திருக்குறளை கொண்டு சேர்க்க
 

ஆவின் பால் பாக்கெட்டுகளில் இனி திருக்குறள்வின் பால் பாக்கெட்டுகளில் இனி திருக்குறள் அச்சிடப்படும் என பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தெரிவித்துள்ளார். தஞ்சை மாவட்டம் பிள்ளையார்பட்டி அருகே உள்ள திருவள்ளுவர் சிலை அவமதிக்கப்பட்டதற்கு பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டங்களை முன்னெடுத்தனர்.

அதன்பிறகு அவமதிக்கப்பட்ட சிலை கூண்டுவைத்து பாதுகாப்பாக வைக்கப்பட்டது. இந்நிலையில் ஆவின் பால் பாக்கெட்டுகளில் திருக்குறள் அச்சிடபடுவதற்காக முதல்வரின் ஒப்புதலை பெற உள்ளதாகவும் அவர் கூறினார்.

திருக்குறளை ஆவின் பால் பைகளில் அச்சிட்டு வழங்குவதன் மூலம் ஒவ்வொரு இல்லங்களிலும் திருக்குறளை கொண்டு சேர்க்க முடியும் என்றும், எனவே இதற்கு செயல்வடிவம் கொடுக்க வேண்டும் என்றும் தமிழக பாரதிய ஜனதாவின் தகவல் தொழில்நுட்ப பிரிவு தலைவர் நிர்மல் குமார் ட்விட்டர் மூலம் அமைச்சர் ராஜேந்திர பாலாஜிக்கு வேண்டுகோள் விடுத்தார். அதற்கு அமைச்சர் ட்விட்டரிலேயே இவ்வாறு பதில் அளித்தார்.

https://www.A1TamilNews.com

 

From around the web