மீன் வாங்கும் போது கவனிக்க வேண்டியவை

வார விடுமுறை நாட்கள் என்றாலே அசைவம் தான். அதிலும் மீனில் அத்தியாவசிய சத்துக்கள் ஏராளம். புரோட்டீன் ,ஒமேகா3 கொழுப்பு அமிலங்கள் நிறைந்து காணப்படுவதால் வாரம் ஒரு முறை சேர்த்துக் கொள்ளலாம். காய்களை வாங்கும் போது புதிதாக இருக்கிறதா என்று கேட்டு வாங்குவதைப் போல் நம்மில் பலருக்கு மீன் வாங்குவதில் குழப்பம் இருக்கிறது. பதப்படுத்தப்பட்ட மீன்கள் பல நேரங்களில் உடலுக்கு வாந்தி, பேதி போன்ற ஒவ்வாமையை உண்டு பண்ணி விடும். மீன் வாங்கும் போது கவனிக்கப்பட வேண்டியவை மீன்
 

மீன் வாங்கும் போது கவனிக்க வேண்டியவைவார விடுமுறை நாட்கள் என்றாலே அசைவம் தான். அதிலும் மீனில் அத்தியாவசிய சத்துக்கள் ஏராளம். புரோட்டீன் ,ஒமேகா3 கொழுப்பு அமிலங்கள் நிறைந்து காணப்படுவதால் வாரம் ஒரு முறை சேர்த்துக் கொள்ளலாம்.

காய்களை வாங்கும் போது புதிதாக இருக்கிறதா என்று கேட்டு வாங்குவதைப் போல் நம்மில் பலருக்கு மீன் வாங்குவதில் குழப்பம் இருக்கிறது. பதப்படுத்தப்பட்ட மீன்கள் பல நேரங்களில் உடலுக்கு வாந்தி, பேதி போன்ற ஒவ்வாமையை உண்டு பண்ணி விடும்.  மீன் வாங்கும் போது கவனிக்கப்பட வேண்டியவை

மீன் பார்க்கும் போதே புதிது போல் இருந்தால் அது நல்ல மீன். மீனின் கண்கள்  தெளிவாக இருந்தால் அது புதிய  மீன். ஒருவேளை கண்கள் மங்கலாக இருந்தால்  பழைய ஸ்டாக். அந்த மீனை வாங்கக் கூடாது .

மீனின் மீது ஏதேனும் காயங்கள் இருப்பின் வாங்குவதை தவிர்க்க வேண்டும். அதிலும் முக்கியமான விஷயம் மீனின் செவுள் செந்நிறமாக இருந்தால் நல்ல மீன் . சாம்பல் நிறத்தில் இருந்தால் கெட்ட மீன். இந்த நிற மீன்கள் வாங்குவதைத் தவிர்க்க வேண்டும்.

A1TamilNews.com

From around the web