திரையரங்குகளை தற்போது திறக்க இயலாது! அமைச்சர் கடம்பூர் ராஜூ உறுதி!

தமிழகத்தில் கொரோனா பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதைத் தடுக்க பல்வேறு தடுப்பு முறைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. பாதிப்பு குறைவாக உள்ள பகுதிகளில் படிப்படியாக தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில் திரையரங்குகள் திறப்பு குறித்து கடம்பூர் செ.ராஜூ செய்தியாளர்களிடம் விளக்கம் அளித்துள்ளார். அதன் படி திரைப்பட படப்பிடிப்பு நடத்த அனுமதி கோரி திரைப்படத்துறையினர் கோரிக்கை விடுத்துள்ளனர். தற்போதைய சூழ்நிலையில் சின்னத்திரை படப்பிடிப்பு நடத்த அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. திரைப்பட படப்பிடிப்புக்கள் வெளியிடங்களில் நடத்தப்படுவதால் குறிப்பிட்ட பகுதியில்
 

திரையரங்குகளை தற்போது  திறக்க இயலாது! அமைச்சர் கடம்பூர் ராஜூ உறுதி!மிழகத்தில் கொரோனா பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதைத் தடுக்க பல்வேறு தடுப்பு முறைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. பாதிப்பு குறைவாக உள்ள பகுதிகளில் படிப்படியாக தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன.

அந்த வகையில் திரையரங்குகள் திறப்பு குறித்து கடம்பூர் செ.ராஜூ செய்தியாளர்களிடம் விளக்கம் அளித்துள்ளார். அதன் படி திரைப்பட படப்பிடிப்பு நடத்த அனுமதி கோரி திரைப்படத்துறையினர் கோரிக்கை விடுத்துள்ளனர். தற்போதைய சூழ்நிலையில் சின்னத்திரை படப்பிடிப்பு நடத்த அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

திரைப்பட படப்பிடிப்புக்கள் வெளியிடங்களில் நடத்தப்படுவதால் குறிப்பிட்ட பகுதியில் பார்வையாளர்கள் கூட்டம் கூடுவதை தவிர்க்க தற்போது அனுமதி அளிக்க இயலாது. மேலும் திரையரங்கு திறப்பு குறித்து மத்திய அரசு இதுவரை எந்த வித அறிவிப்பையும் வெளியிடவில்லை. எனவே இந்த ஆகஸ்ட்டில் திரையரங்கு திறக்க வாய்ப்பில்லை, என அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்துள்ளார்.

A1TamilNews.com

From around the web