குஜராத்தில் உருவாக்கப்பட்டுள்ள உலகின் மிகப்பெரிய கிரிக்கெட் மைதானம்!

உலகின் மிகப்பெரிய கிரிக்கெட் மைதானம் குஜராத்தில் உருவாகி வருகிறது. இதில் போட்டிகள் நடத்த சர்வதேச கிரிக்கெட் வாரியத்தின் ஒப்புதலுக்காக இந்திய கிரிக்கெட் வாரியம் காத்திருக்கிறது. உலகில் மிகப் பெரிய கிரிக்கெட் மைதானம் என்ற சிறப்பை இப்போது ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் பெற்றுள்ளது. இந்த மைதானத்தில் 90 ஆயிரம் பேர் அமர்ந்து பார்க்கக் கூடிய வசதி உள்ளது. இதன் பிரமாண்டத்தை பின்னுக்குத் தள்ளும் வகையில் இதைவிட பெரிய மைதானம், குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் கட்டப்பட்டு வருகிறது. அங்கு, கடந்த 1982ஆம்
 

குஜராத்தில் உருவாக்கப்பட்டுள்ள உலகின் மிகப்பெரிய கிரிக்கெட் மைதானம்!லகின் மிகப்பெரிய கிரிக்கெட் மைதானம் குஜராத்தில் உருவாகி வருகிறது. இதில் போட்டிகள் நடத்த சர்வதேச கிரிக்கெட் வாரியத்தின் ஒப்புதலுக்காக இந்திய கிரிக்கெட் வாரியம் காத்திருக்கிறது.

உலகில் மிகப் பெரிய கிரிக்கெட் மைதானம் என்ற சிறப்பை இப்போது ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் பெற்றுள்ளது. இந்த மைதானத்தில் 90 ஆயிரம் பேர் அமர்ந்து பார்க்கக் கூடிய வசதி உள்ளது. இதன் பிரமாண்டத்தை பின்னுக்குத் தள்ளும் வகையில் இதைவிட பெரிய மைதானம், குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் கட்டப்பட்டு வருகிறது.

அங்கு, கடந்த 1982ஆம் ஆண்டு கட்டப்பட்ட சர்தார் படேல் மைதானம் 2015ஆம் ஆண்டு இடிக்கப்பட்ட நிலையில், சுமார் 700 கோடி ரூபாய் மதிப்பில் உலகின் மிகப் பெரிய மைதானமாக புதுப்பிக்கப்பட்டு வருகிறது. இந்த புனரமைக்கப்பட்ட மைதானத்தில் ஒரு லட்சத்து 10 ஆயிரம் பேர் அமர்ந்து பார்க்க முடியும். 25 பேர் அமரக்கூடிய வகையில் 75 குளிர்சாதன அறைகள் கொண்ட பார்வையாளர்கள் மாடமும் அதில் அடங்கும். உள்ளரங்கு பயிற்சிக் கூடம், மருத்துவமனை, பிரமாண்ட நீச்சல் குளம் என சகல வசதிகளும் இந்த மைதானம் உள்ளது.

முதல்முறையாக ஆடுகளம் அமைந்துள்ள பகுதிக்கு எல்இடி விளக்குகள் பயன்படுத்தப்பட்டுள்ளன. 10 ஆயிரம் இருசக்கர வாகனங்கள், மூவாயிரம் கார்கள் ஒரே நேரத்தில் நிறுத்தி வைக்கும் வகையில் பிரமாண்ட பார்க்கிங் வசதியும் இடம்பெற்றுள்ளது. அடுத்தாண்டு திறப்பு விழா காணவுள்ளதால் இந்தப் பெரிய மைதானத்தில் உலக லெவன் மற்றும் ஆசிய லெவன் அணிகளுக்கு இடையேயான கிரிக்கெட் போட்டியை முதல் போட்டியாக நடத்த பிசிசிஐ திட்டமிட்டுள்ளது.

இதுதொடர்பாக பிசிசிஐ சார்பில் சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதற்கு ஐசிசி ஒப்புக் கொள்ளும் பட்சத்தில் உலகிலேயே மிகப் பெரிய கிரிக்கெட் மைதானத்தில் போட்டிகள் நடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

https://www.A1TamilNews.com

From around the web