இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்தார் முதல்வர்!

கொரானோ பாதிப்பு தடுப்பு நடவடிக்கைக்காக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு நடைமுறைப்படுத்தப்பட்டிருக்கிறது. இந்நிலையில் இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்ய சட்டசபை இன்று கூடியது. நாற்காலிகள் இடைவெளி விட்டு போடப்பட்டிருந்தது. சட்டசபை முழுவதும் கிருமி நாசினி தெளிக்கப்பட்டிருந்தது. சட்டசபை உறுப்பினர்கள் அனைவரும் மாஸ்க் அணிந்து வந்திருந்தனர். ஏப்ரல், மே, ஜுன் மாதங்களுக்கான 2042 கோடி இடைக்கால பட்ஜெட்டை புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி தாக்கல் செய்தார். கொரோனாவிற்காக சிறப்பு ஒத்திவைப்பு தீர்மானம் கொண்டு வரப்படாததால் அதிமுகவினர் வெளிநடப்பு செய்தனர். கொரானோ
 

இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்தார் முதல்வர்!கொரானோ பாதிப்பு தடுப்பு நடவடிக்கைக்காக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு நடைமுறைப்படுத்தப்பட்டிருக்கிறது. இந்நிலையில் இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்ய சட்டசபை இன்று கூடியது.

நாற்காலிகள் இடைவெளி விட்டு போடப்பட்டிருந்தது. சட்டசபை முழுவதும் கிருமி நாசினி தெளிக்கப்பட்டிருந்தது. சட்டசபை உறுப்பினர்கள் அனைவரும் மாஸ்க் அணிந்து வந்திருந்தனர்.

ஏப்ரல், மே, ஜுன் மாதங்களுக்கான 2042 கோடி இடைக்கால பட்ஜெட்டை புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி தாக்கல் செய்தார். கொரோனாவிற்காக சிறப்பு ஒத்திவைப்பு தீர்மானம் கொண்டு வரப்படாததால் அதிமுகவினர் வெளிநடப்பு செய்தனர்.

கொரானோ தொற்றிலிருந்து புதுச்சேரியை தடுப்பதற்காக 995 கோடி ரூபாய் ஒதுக்க பிரதமருக்கு கடிதம் எழுதியுள்ளதாக கூறினார்.

மேலும் புதுச்சேரி, காரைக்காலில் 21 வெண்ட்டிலேட்டர்கள் தற்போது உள்ளதாகவும், படுக்கைகளும் தயாராக உள்ளதாகவும், கொரோனா தொற்று இருப்பதை உறுதி செய்யும் மையங்கள் புதுச்சேரியில் நான்கும், காரைக்காலில் இரண்டும் உள்ளதாக தெரிவித்தார்.

புதுச்சேரியில் சமூகக் கட்டுப்பாட்டுடன் 85 சதவீதத்தினர் உள்ளதாகவும், மீதமுள்ளோரும் கடைபிடிக்கவேண்டும் எனவும், முதலில் சட்டமன்ற உறுப்பினர்கள் கடைபிடிக்க வேண்டும் என்றும் தெரிவித்தார்.

A1TamilNews.com

From around the web