கொரானோ இல்லாத முதல் இந்திய மாநிலம்! முதல்வர் நம்பிக்கை!

கொரானோ தடுப்பு நடவடிக்கையாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. கொரானாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் தெலங்கானா மாநிலத்தில் 70 பேருக்கு கொரானோ பாதிப்பு உறுதி செய்யப்பட்டிருந்தது. கொரானோ பாதிப்பு இல்லாதவர்கள் இன்று தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிக்கப்படுகிறார்கள். கொரானோ பாதிப்பு உறுதி செய்யப்பட்டவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. வெளிநாடுகளில் இருந்து வந்தவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு அரசின் கண்காணிப்பில் இருக்கின்றனர். இவர்களின் தனிமைப்படுத்தல் காலம் ஏப்ரல்7ம் தேதி முடிவடையும் நிலையில், புதிதாக யாருக்கும்
 

கொரானோ இல்லாத முதல் இந்திய மாநிலம்! முதல்வர் நம்பிக்கை!கொரானோ தடுப்பு நடவடிக்கையாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.

கொரானாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் தெலங்கானா மாநிலத்தில் 70 பேருக்கு கொரானோ பாதிப்பு உறுதி செய்யப்பட்டிருந்தது.

கொரானோ பாதிப்பு இல்லாதவர்கள் இன்று தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிக்கப்படுகிறார்கள். கொரானோ பாதிப்பு உறுதி செய்யப்பட்டவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

வெளிநாடுகளில் இருந்து வந்தவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு அரசின் கண்காணிப்பில் இருக்கின்றனர். இவர்களின் தனிமைப்படுத்தல் காலம் ஏப்ரல்7ம் தேதி முடிவடையும் நிலையில், புதிதாக யாருக்கும் இதுவரை பாதிப்பு ஏற்படவில்லை.

கொரானோ தொற்று இல்லாத முதல் இந்திய மாநிலமாக தெலங்கானா இருக்கும் என அம்மாநில முதல்வர் சந்திரசேகரராவ் நம்பிக்கை தெரிவித்து உள்ளார்.

A1TamilNews.com

From around the web