உலகின் முதல் கொரோனா தடுப்பூசியை போட்டுக் கொண்ட ரஷ்ய அதிபர் புதின் மகள்!

உலக நாடுகள் அனைத்தும் கொரோனாவைக் கட்டுப்படுத்த போராடி வரும் நிலையில் ரஷ்யாவில் கொரோனாவிற்கான தடுப்பூசி கண்டறியப்பட்டுள்ளது. பல்வேறு கட்ட சோதனைகளுக்கு பிறகு மனிதர்களுக்கு செலுத்தக்கூடிய கட்டத்தை நெருங்கியுள்ளது இந்த தடுப்பூசி. உலக நாடுகள் பலவற்றில் இன்னும் கொரோனாவிற்கான தடுப்பூசியை கண்டறியும் ஆராய்ச்சிகள் தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில் இந்த தடுப்பூசி குறித்து பல்வேறு சர்ச்சைகளும், விவாதங்களும் எழுந்து வருகின்றன. இந்நிலையில் ரஷ்ய சுகாதாரத்துறை அனுமதி அளித்ததை அடுத்து மனிதர்களுக்கு இந்த தடுப்பூசியை போட முடிவு செய்துள்ளது .
 

உலகின் முதல் கொரோனா தடுப்பூசியை போட்டுக் கொண்ட ரஷ்ய அதிபர் புதின் மகள்!லக நாடுகள் அனைத்தும் கொரோனாவைக் கட்டுப்படுத்த போராடி வரும் நிலையில் ரஷ்யாவில் கொரோனாவிற்கான தடுப்பூசி கண்டறியப்பட்டுள்ளது. பல்வேறு கட்ட சோதனைகளுக்கு பிறகு மனிதர்களுக்கு செலுத்தக்கூடிய கட்டத்தை நெருங்கியுள்ளது இந்த தடுப்பூசி.

உலக நாடுகள் பலவற்றில் இன்னும் கொரோனாவிற்கான தடுப்பூசியை கண்டறியும் ஆராய்ச்சிகள் தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில் இந்த தடுப்பூசி குறித்து பல்வேறு சர்ச்சைகளும், விவாதங்களும் எழுந்து வருகின்றன.

இந்நிலையில் ரஷ்ய சுகாதாரத்துறை அனுமதி அளித்ததை அடுத்து மனிதர்களுக்கு இந்த தடுப்பூசியை போட முடிவு செய்துள்ளது . இதனையடுத்து கொரோனாவிற்கான முதல் தடுப்பூசியை ரஷ்ய அதிபர் புதின் மகள்களில் ஒருவரே போட்டுக்கொண்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

கொரோனாவிற்கான இந்த தடுப்பூசி அனைத்து கட்ட பரிசோதனைகளையும் தாண்டி சிறப்பாக செயல்படுவதாக சுகாதாத்துறை அறிவித்துள்ளது. ஆனால் யாரையும் வற்புறுத்தி இந்த ஊசியை போட சொல்லப் போவதில்லை. தானாக முன் வந்து போட்டுக் கொள்பவர்களுக்கு மட்டுமே அரசு சார்பில் இந்த தடுப்பூசி போடப்படும் என ரஷ்ய அதிபர் புதின் விளக்கம் அளித்துள்ளார்.

A1TamilNews.com

From around the web