கொரோனா பணிக்காக தனது திருமணத்தை தள்ளி வைத்த போலீசார்! குவியும் பாராட்டுக்கள்!

இந்தியாவில் அதிகரித்து வரும் கொரோனா தொற்று காரணமாக ஊரடங்கு உத்தரவு ஐந்தாம் கட்டத்தை நோக்கி நகர்ந்து வருகிறது. இந்நிலையில், இந்த ஊரடங்கு காரணமாக வடமாநிலத்துக்கு சிறப்பு ரெயிலில் செல்லும் தொழிலாளர்களை அனுப்பும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளதால் கோவையில் உள்ள போலீசார் ஒருவர், தனது திருமணத்தை தள்ளி வைத்து விட்டு, தொடர்ந்து தனது பணியில் ஈடுபட்டு வருகிறார். கோவையில், வெங்கடேஷ் பிரபு என்பவர், கோவைப்புதூர் பட்டாலியனின் படைப்பிரிவில் போலீசாராக வேலைப் பார்த்து வருகிறார். இவர் கொரோனா பாதுகாப்பு பணிக்காக
 

கொரோனா பணிக்காக தனது திருமணத்தை தள்ளி வைத்த போலீசார்! குவியும் பாராட்டுக்கள்!ந்தியாவில் அதிகரித்து வரும் கொரோனா தொற்று காரணமாக ஊரடங்கு உத்தரவு ஐந்தாம் கட்டத்தை நோக்கி நகர்ந்து வருகிறது.

இந்நிலையில், இந்த ஊரடங்கு காரணமாக வடமாநிலத்துக்கு சிறப்பு ரெயிலில் செல்லும் தொழிலாளர்களை அனுப்பும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளதால் கோவையில் உள்ள போலீசார் ஒருவர், தனது திருமணத்தை தள்ளி வைத்து விட்டு, தொடர்ந்து தனது பணியில் ஈடுபட்டு வருகிறார்.

கோவையில், வெங்கடேஷ் பிரபு என்பவர், கோவைப்புதூர் பட்டாலியனின் படைப்பிரிவில் போலீசாராக வேலைப் பார்த்து வருகிறார். இவர் கொரோனா பாதுகாப்பு பணிக்காக கடந்த மாதம் திருப்பூர் சென்றார்.

இவருக்கு கடந்த 2 மாதத்துக்கு முன்பு திருமணம் நிச்சயம் செய்யப்பட்டது. இந்நிலையில், வெங்கடேஷ்பிரபுவின் திருமணம் நேற்று முன்தினம் நடப்பதாக இருந்தது. ஆனால், தான் கொரோனா பாதுகாப்பு பணியில் இருப்பதால், தனது திருமணத்தை தள்ளி வைத்தார். இது தொடர்பாக பெண் வீட்டினருடன் பேசி, இந்த முடிவை வெங்கடேஷ்பிரபு எடுத்தார்.

தற்போது வெங்கடேஷ் பிரபு திருப்பூர் ஜெய்வாபாய் பள்ளியில் வடமாநிலத்துக்கு சிறப்பு ரெயிலில் செல்லும் தொழிலாளர்களை அனுப்பும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்.

A1TamilNews.com

From around the web