கணிணியும் இன்டெர்நெட் சேவையும் இல்லாமல் ஆன்லைன் வகுப்புகள் எப்படி சாத்தியமாகும்? முன்னாள் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கேள்வி!

ஆன்லைன் வகுப்புகளை முறைப்படி மாணவர்களுக்கு பயன்தரத்தக்க வகையில் நடத்துவதற்கான உரிய வசதிகளோ, ஏற்பாடுகளோ செய்யப்படாத நிலையில், பள்ளிக் கல்வித்துறை ஏன் அவசரம் காட்டுகிறது என்று முன்னாள் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு கேள்வி எழுப்பியுள்ளார். “தமிழகப் பள்ளிகளில் ‘ஆன்லைன்” மூலம் வகுப்புகள் நடத்தப்படுவதற்குத் தடை விதிக்கப்படுகின்றது என்றும் அதை மீறும் வகையில் செயல்படும் பள்ளிகள் மீது நடவடிக்கை பாயும் எனவும் வீராவேசமாக அறிவித்த அடுத்த அரைமணி நேரத்திற்குள்ளாகவே, “ஆன்லைன் வகுப்புகள் நடைபெறுவதைத் தடுக்க முடியாது
 

கணிணியும் இன்டெர்நெட் சேவையும்  இல்லாமல் ஆன்லைன் வகுப்புகள் எப்படி சாத்தியமாகும்? முன்னாள் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கேள்வி!ன்லைன் வகுப்புகளை முறைப்படி மாணவர்களுக்கு பயன்தரத்தக்க வகையில் நடத்துவதற்கான உரிய வசதிகளோ, ஏற்பாடுகளோ செய்யப்படாத நிலையில், பள்ளிக் கல்வித்துறை ஏன் அவசரம் காட்டுகிறது என்று முன்னாள் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு கேள்வி எழுப்பியுள்ளார்.

“தமிழகப் பள்ளிகளில் ‘ஆன்லைன்” மூலம் வகுப்புகள் நடத்தப்படுவதற்குத் தடை விதிக்கப்படுகின்றது என்றும் அதை மீறும் வகையில் செயல்படும் பள்ளிகள் மீது நடவடிக்கை பாயும் எனவும் வீராவேசமாக அறிவித்த அடுத்த அரைமணி நேரத்திற்குள்ளாகவே, “ஆன்லைன் வகுப்புகள் நடைபெறுவதைத் தடுக்க முடியாது அவற்றுக்குத் தடை ஏதுமில்லை” என “வழக்கம் போல்” பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அவர்கள் மறு அறிவிப்பொன்றினைச் செய்திருக்கின்றார்.

பள்ளிக் கல்வித்துறையின் கடந்த காலச் செயல்பாடுகளைத் தொடர்ந்து கவனித்து வருபவர்களுக்கு இத்தகைய குளறுபடிகள் புதிதானவை அல்ல என்றாலும், இதனால் பாதிக்கப்படப் போகும் மாணவர்கள், அவர்தம் பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்களின் நிலை குறித்து நாம் அனைவருமே கவலையும், அதிர்ச்சியும் அடையும் வகையில் மாறி மாறி வரும் இத்தகு அறிவிப்புகள் அமைந்துள்ளன என்பதைப் பள்ளிக்கல்வித்துறை சற்றும் உணர்ந்தாகத் தெரியவில்லை.

ஆராயாமலும், ஆலோசிக்காமலும்; எடுக்கப்படும் இத்தகைய திடீர் முடிவுகள் அந்தத் துறையை மட்டுமல்ல; ஒட்டு மொத்தத் தமிழகத்தையே தொடர்ந்து குழப்பத்தில் ஆழ்த்தி வருகின்றன என்பது கண்கூடான உண்மை.

கொரோனா நோய்த் தொற்றின் தீவிரம் சிறிதும் குறையாமல் தமிழகம் இன்றும் தத்தளித்துக் கொண்டுள்ள நிலையில் சிலருடைய அழுத்தத்திற்குப் பணிந்து உடனடியாக பள்ளிகளைத் திறந்து விட வேண்டும் என்றும், அவர்தம் விருப்பத்திற்கொப்ப ஆன்லைன் வகுப்புகள் நடத்தப்பட வேண்டும் எனவும் முனைப்புடன் எதைப்பற்றியும் கவலைப்படாது பள்ளிக் கல்வித்துறை செயல்படுவது வேதனைக்குரியது மட்டுமல்ல; கடும் பின் விளைவுகளை உருவாக்கக் கூடியதுமாகும்.

‘ஆன்லைன்” வகுப்புகளைப் பொறுத்தமட்டில் கல்வி கற்கும் சூழலிலும், முறைகளிலும் நகர்ப்புற மாணவர்களுக்கும், கிராமப்புற மாணவர்களுக்கும் பெரும் வேறுபாடு உண்டு. கிராமப்புற மாணவர்களுக்கு; குறிப்பாக, மலைவாழ் மாணவர்களுக்கு இத்தகைய “ஆன்லைன்” வகுப்புகளின் மூலம் மட்டுமே கற்கக்கூடிய வசதிகள் இப்போது இல்லை.

தமிழகத்தில் உள்ள ஏறத்தாழ ஒரு கோடியே முப்பது லட்சம் மாணவர்களில் அறுபது சதவீதம் மாணவர்கள் கிராமப்புறங்களில் இருந்து வருகின்றனர் என்பதை அரசு கவனத்தில் கொள்ள வேண்டும். ‘ஆன்லைன்” வகுப்புகளை முறைப்படி மாணவர்களுக்கு பயன்தரத்தக்க வகையில் நடத்துவதற்கான உரிய வசதிகளோ, ஏற்பாடுகளோ இன்னும் முழுமையாகச் செய்யப்படவில்லை. 

அரசின் சார்பாக மாணவர்களுக்கு வழங்கப்பட்டுள்ள “லேப்டாப்” போன்றவற்றிலோ அல்லது அவர்களின் இல்லங்களில் சொந்தமாகப் பயன்படுத்தப்படும் செல்பேசிகளிலோ “ஆன்லைன்” பாடங்களை கற்பதற்கான உரிய உள்கட்டமைப்புகள் இல்லை. கல்வித் தொலைக்காட்சியின் பயன்பாடு ஒரு லட்சத்திற்கும் குறைவான இணைப்புகளுக்கு மட்டுமே இதுகாறும் இருக்கின்றது என்பதும் அரசு கணக்கில் கொள்ள வேண்டிய உண்மை. இதுகுறித்த முழுத்தரவுகளும் புள்ளிவிவரங்களும் அரசினால் மாநிலம் முழுமையும் சேகரிகப்பட வேண்டியது அவசியமாகும்,” என்று முன்னாள் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு கூறியுள்ளார்.

A1TamilNews.com

From around the web