அமமுகவிலிருந்து தங்க தமிழ்ச் செல்வன் நீக்கம் – டிடிவி தினகரன் தகவல்!

சென்னை: செய்தியாளர்கள் சந்திப்பில் சரியாக பேசவில்லை என்றால் கொள்கைப் பரப்புச் செயலாளர் பதவியிலிருந்து தங்க தமிழ்ச் செல்வன் நீக்கப்படுவார் என்று டிடிவி தினகரன் கூறியுள்ளார். அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் முன்னணி தலைவர்களில் ஒருவராக விளங்கி வந்தார் தங்க தமிழ்ச் செல்வன். தேனி நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிட்டு தோல்வியை தழுவினார். அதிமுக தரப்பிலிருந்தும் திமுக தரப்பிலிருந்தும் அவருக்கு தூது விடப்பட்டு வருவதாகக் கூறப்படுகிறது. கடந்த வாரம் டிடிவி தினகரனின் உதவியாளரிடம் தங்க தமிழ்ச் செல்வன் போனில் பேசியது
 

சென்னை: செய்தியாளர்கள் சந்திப்பில் சரியாக பேசவில்லை என்றால் கொள்கைப் பரப்புச் செயலாளர் பதவியிலிருந்து தங்க தமிழ்ச் செல்வன் நீக்கப்படுவார் என்று டிடிவி தினகரன் கூறியுள்ளார்.

அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் முன்னணி தலைவர்களில் ஒருவராக விளங்கி வந்தார் தங்க தமிழ்ச் செல்வன். தேனி நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிட்டு தோல்வியை தழுவினார். அதிமுக தரப்பிலிருந்தும் திமுக தரப்பிலிருந்தும் அவருக்கு தூது விடப்பட்டு வருவதாகக் கூறப்படுகிறது.

கடந்த வாரம் டிடிவி தினகரனின் உதவியாளரிடம் தங்க தமிழ்ச் செல்வன் போனில் பேசியது வாட்ஸ் அப்பில் வலம் வந்து பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில் தொலைக்காட்சி பேட்டி மூலம் என்னை அமமுகவிலிருந்து நீக்குங்கள் என்றும் தங்கத் தமிழ்ச்செல்வன் கூறியிருந்தார்.

இது குறித்து டிடிவி தினகரன் விளக்கம் கேட்டபோது, செய்தியாளர்கள் கேட்ட கேள்விக்கு அவ்வாறு பதிலளித்ததாக கூறியுள்ளார். இனி செய்தியாளர்கள் சந்திப்பில் சரியாகப் பேசவில்லை என்றால் வேறு நபரை கொள்கைப் பரப்புச் செயலாளராக நியமிக்கப் போவதாக எச்சரிக்கை செய்துள்ளதாக டிடிவி தினகரன் கூறியுள்ளார்.

செந்தில் பாலாஜி மூலம் திமுகவுக்கும், அமைச்சர்கள் மூலம் அதிமுகவும் தூது விடப்பட்டுள்ள நிலையில், தங்கத் தமிழ்ச் செல்வன் தானாகப் போகட்டும் என்று டிடிவி தினகரன் முடிவெடுத்துள்ளதாகத் தெரிகிறது. இன்னும் ஏதாவது வெளிப்படையாகப் பேசினால் கொ.ப.செ.பதவியை மட்டும் பறிக்கலாம் என்று அமைதி காக்கிறாராம் டிடிவி.

ஆக, தொலைகாட்சியில் படு ஸ்டைலாக, கெத்தாக டிடிவிக்கு ஆதரவு திரட்டி வந்த தங்க தமிழ்ச்செல்வன் வேறு ஒரு தலைமைக்கு ஆதரவாக விரைவில் தமிழ் தொலைக்காட்சிகளில் வலம் வரப்போகிறார் என்று தெரிகிறது.

– வணக்கம் இந்தியா

From around the web