ரஜினிக்காக அதிமுக ஆட்சியை கலைக்கச் சொல்கிறாரா தமிழருவி மணியன்?

துக்ளக் விழாவில் கலந்து கொண்டு பேசிய தமிழருவி மணியனின் பேச்சு அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது. மஹாராஷ்ட்ராவில் பாஜக ஆட்சி அமைத்தது ஜனநாயகப் படுகொலை என்று விமர்சித்துள்ள தமிழருவி மணியன், தமிழகத்தில் நடைபெற்று வரும் அதிமுக ஆட்சியை கலைக்க வேண்டும் என்றும் கூறியுள்ளார். ஊழலை ஒழிப்போம் என்று கூறி வரும் பிரதமர் மோடி, தமிழ்நாட்டில் நாள் தோறும் கொள்ளை அடித்து வரும் ஆட்சியை ஏன் இரண்டு ஆண்டுகளாக பாதுகாத்து வருகிறார் என்று கேள்வி எழுப்பிய தமிழருவி மணியன்,
 

ரஜினிக்காக அதிமுக ஆட்சியை கலைக்கச் சொல்கிறாரா தமிழருவி மணியன்?

துக்ளக் விழாவில் கலந்து கொண்டு பேசிய தமிழருவி மணியனின் பேச்சு அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.

மஹாராஷ்ட்ராவில் பாஜக ஆட்சி அமைத்தது ஜனநாயகப் படுகொலை என்று விமர்சித்துள்ள தமிழருவி மணியன், தமிழகத்தில் நடைபெற்று வரும் அதிமுக ஆட்சியை கலைக்க வேண்டும் என்றும் கூறியுள்ளார்.

ஊழலை ஒழிப்போம் என்று கூறி வரும் பிரதமர் மோடி, தமிழ்நாட்டில் நாள் தோறும் கொள்ளை அடித்து வரும் ஆட்சியை ஏன் இரண்டு ஆண்டுகளாக பாதுகாத்து வருகிறார் என்று கேள்வி எழுப்பிய தமிழருவி மணியன், இந்த ஆட்சியை கலைத்து விட்டு ஆளுநர் ஆட்சியை அமல்படுத்துமாறும் கோரிக்கை விடுத்துள்ளார்.

”10 அமைச்சர்கள் வீட்டில் ரெய்டு நடத்துங்கள். எண்ண முடியாத அளவுக்கு பணம் கோடிக்கணக்கில் கிடைக்கும். அது போதாதா ஆட்சியை கலைப்பதற்கு என்று சொல்லியவர், அதன் பிறகு 6 மாதம் ஆளுநர் ஆட்சியைக் கொண்டு வாருங்கள். ஆளுநர் ஆட்சியென்றால் அது பாஜக ஆட்சி தானே?. மக்களுக்கு நல்லது செய்யுங்கள். தமிழர்களின் தலையாய பிரச்சனைகளை தீருங்கள்.  மக்களிடம் நல்ல பெயர் எடுத்து படிப்படியாக வளருங்கள்.

அதிமுக ஆட்சியை கலைத்து விட்டால், அடுத்த தேர்தலில் அந்த கட்சியினர் பணத்தை செலவழிக்க மாட்டார்கள். சம்பாதித்ததை சேர்த்து வைக்கத்தான் பார்ப்பார்கள். அதிமுக பணத்தை இறக்காவிட்டால், திமுகவும் பணத்தை செலவழிக்காது. இரண்டு பேரும் பணத்தை கொடுக்காத நிலையில் ஜனநாயகத்தை மட்டுமே நம்பி புதிதாக ஒரு கட்சி அங்கே நின்றால், எளிதாக வெற்றி பெற்று விடும்.

இதைச் செய்யாமல் பாலுக்கும் காவல் பூனைக்கும் தோழன் என்று சொல்லிக் கொண்டிருந்தால் சரியில்லை,” என்று தமிழருவி மணியன் பேசியுள்ளார். அவருடைய பேச்சு ரஜினிக்கு களம் அமைத்துக் கொடுப்பதற்காக அதிமுக அரசை கவிழுங்கள் என்ற ரீதியிலேயே அமைந்துள்ளதாக அரசியல் பார்வையாளர்கள் கருதுகிறார்கள்.

அதிமுக ஊழலைப் பற்றி சொல்லும் தமிழருவி மணியன், நாடாளுமன்றத் தேர்தலில்  செலவழித்த 27 ஆயிரம் கோடி ரூபாய் பாஜகவுக்கு எங்கிருந்து  வந்தது என்பதையும் கேட்பாரா? என்றும் விமர்சனங்கள் எழுந்துள்ளன.

அதிமுக ஆட்சியை கவிழ்த்து விட்டால் புதிதாக வரும் கட்சி ஆட்சியில் அமரும் என்று தமிழருவி மணியன் குறிப்பிட்டது ரஜினியின் கட்சியைத் தான். அவர் சொன்னது போல், சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னதாக அதிமுக ஆட்சியை பாஜக கலைக்குமா? ரஜினி ஆட்சியைப் பிடிப்பாரா? இரு திராவிடக் கட்சிகளையும் தோற்கடிப்பேன் என்ற தமிழருவி மணியனின் சபதம் நிறைவேறுமா?. அடுத்த சட்டமன்றத் தேர்தல் வரை பொறுந்திருக்க வேண்டும்.

https://www.A1TamilNews.com

From around the web