எம்ஜிஆருக்கு ஒரு நீதி.. ரஜினிக்கு ஒரு நீதியா? தமிழருவி மணியன் கிடுக்கிப்பிடி கேள்வி!

ரஜினிகாந்திடம் கேட்கும் கேள்விகளை எம்ஜிஆரிடம் கேட்டிருக்க முடியுமா? என்று தமிழருவி மணியன் கூறியுள்ளார். சென்னையில் கவிஞர் கண்ணதாசன் மற்றும் எம்,எஸ். விஸ்வநாதன் விழாவில், தொழிலதிபர் நல்லி குப்புசாமி, இயக்குனர் எஸ்.பி.முத்துராமன் ஆகியோருடன் தமிழருவி மணியன் கலந்து கொண்டார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய தமிழருவி மணியன், ரஜினிகாந்தின் அரசியல் பிரவேசம் தொடர்பான கேள்விகளுக்கு பதில் அளித்தார். முன்பு ஆண்டுக்கு ஒரு படம் நடித்துக் கொண்டிருந்தவர், தற்போது மூன்று படங்கள் நடிக்கிறார். அரசியல் அறிவிப்பு திரைப்படங்களுக்கான வியாபார யுத்தி தானா என்று
 

எம்ஜிஆருக்கு ஒரு நீதி.. ரஜினிக்கு ஒரு நீதியா? தமிழருவி மணியன் கிடுக்கிப்பிடி கேள்வி!

ஜினிகாந்திடம் கேட்கும் கேள்விகளை எம்ஜிஆரிடம் கேட்டிருக்க முடியுமா? என்று தமிழருவி மணியன் கூறியுள்ளார்.

சென்னையில்  கவிஞர் கண்ணதாசன் மற்றும் எம்,எஸ். விஸ்வநாதன் விழாவில், தொழிலதிபர்  நல்லி குப்புசாமி,  இயக்குனர் எஸ்.பி.முத்துராமன் ஆகியோருடன்  தமிழருவி மணியன் கலந்து கொண்டார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய  தமிழருவி மணியன், ரஜினிகாந்தின் அரசியல் பிரவேசம் தொடர்பான கேள்விகளுக்கு பதில் அளித்தார்.

முன்பு ஆண்டுக்கு ஒரு படம் நடித்துக் கொண்டிருந்தவர், தற்போது மூன்று படங்கள் நடிக்கிறார். அரசியல் அறிவிப்பு திரைப்படங்களுக்கான வியாபார யுத்தி தானா என்று செய்தியாளர் ஒருவர் கேள்வி எழுப்பினார். பதிலளித்த தமிழருவி மணியன் கூறியதாவது,

“இது மாதிரி எம்ஜிஆரிடம் நீங்கள் கேட்டீர்களா?. எம்.ஜி.ஆர் அரசியல் கட்சியை தொடங்கிய பிறகும் தொடர்ந்து நடித்தார். தேர்தல் களத்தில்  இருந்த போதும் தொடர்ந்து நடித்தார். 1977ம் ஆண்டு தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சியைப் பிடித்த பிறகும், அப்போது நடித்துக் கொண்டிருந்த மதுரையை மீட்ட சுந்தர பாண்டியன் படத்தில் நடித்து முடித்துக் கொடுத்து விட்டு தான் முதல்வராக பதவி ஏற்றார். 

எம்.ஜி.ஆர் தயாரித்து, இயக்கிய அந்தப் படத்தின் இறுதிக்காட்சிகள் எடுக்க வேண்டிய நிலை இருந்ததால் உடனடியாக பதவியேற்க முடியவில்லை. அந்தக் காட்சிகளை எடுத்து முடித்த பிறகே பதவியேற்றார். எம்ஜிஆருக்கு ஒரு நீதி ரஜினிகாந்துக்கு ஒரு நீதியா?

ரஜினிகாந்த் படங்களில் நடிக்கிறார். ஆனால், மக்கள் முன் வந்து ஏமாற்றுவதற்கு நடிக்கவில்லை. அரசியலுக்கு வருவதற்கு முன்பு, முடிந்த வரையில் படங்களை நடித்து முடித்து விடுவது என்ற நிலையில் இருக்கிறார். தர்பார் படம் பொங்கலுக்கு வரும். இப்போது புதிதாக நடிக்கப் போகும் படம் அடுத்த தீபாவளிக்கு வரும். 

அடுத்த தீபாவளிக்குக் பிறகு முழுமையாக அரசியல் களத்தில் தமிழகம் முழுவதும் சுற்றி வருவார்.தேர்தலைச் சந்திப்பார். இதில் வியாபாரத்திற்காக அரசியல் உத்தியைப் பயன்படுத்திகிறார் என்று சொல்வது, நீங்கள் ரஜினிகாந்தை எவ்வளவு கேவலமாக எடை போடுகிறீர்கள் என்பதைத் தான் வெளிப்படுத்துகிறது.

42 ஆண்டுகளுக்கு மேல் தமிழ்நாட்டில் தொடர்ந்து சூப்பர் ஸ்டாராக இருக்கிறாரே. அரசியலுக்கு வருவேன் என்று சொல்லிச் சொல்லித்தான் சூப்பர் ஸ்டார் ஆனாரா?. அதெல்லாம் ஒன்றுமில்லை.

தேர்தல் நாளைக்கே நடக்குமா? நாளைக்கு அதிமுகவின் ஆட்சி கலைந்து விடும். எடப்பாடி முதலமைச்சர் நாற்காலியிலிருந்து இறங்கி விடுவார் என்றால் அதற்கு அடுத்த நாளே, ரஜினிகாந்த் தனது அரசியல் கட்சியைத் தொடங்குவார்,” என்று பேசியுள்ளார் தமிழருவி மணியன்.

நீண்டநாட்களாக தமிழருவி மணியன் ரஜினிகாந்தின் அரசியல் பற்றி வெளிப்படையாக மீடியாக்களிடம் பேசாத நிலையில் ,அவருடையை இந்த பேட்டி ரசிகர்களிடம் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. தனது அரசியல் பிரவேசத்தை அறிவிப்பதற்கு முன்னர், ரஜினிகாந்த் முதலில் சந்தித்துப் பேசியது தமிழருவி மணியனிடம் தான் என்பது குறிப்பிடத் தக்கது.

– வணக்கம் இந்தியா

From around the web