தமிழ்த் தாத்தாவுக்கு பிறந்த நாள் வாழ்த்துவோம் நன்றியுடன்..

“இருந்தமிழே உன்னால் இருந்தேன் இமையோர் விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன்” என்ற “தமிழ்விடுதூது” சுவடியின், பாட்டில் சிக்கிக் கொண்ட டாக்டர் உ.வே.சாமிநாதையர், தமிழ் மொழி தன்னிகரற்றது என உணர்ந்து, “திருந்த உதிப்பித்த பன்னூல் ஒளிர அடியேன் பதிப்பிக்கவே கடைக்கண் பார்” என்ற இரண்டடியை அந்தப் பாட்டில் சேர்த்து இவ்வாறு பூர்த்தி செய்து, “இருந்தமிழே உன்னால் இருந்தேன் இமையோர் விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் திருந்த உதிப்பித்த பன்னூல் ஒளிர அடியேன் பதிப்பிக்கவே கடைக்கண் பார்” தன் வாழ் நாள் முழுவதைவதும்
 

தமிழ்த் தாத்தாவுக்கு பிறந்த நாள்  வாழ்த்துவோம் நன்றியுடன்..“இருந்தமிழே உன்னால் இருந்தேன் இமையோர் விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன்”    என்ற “தமிழ்விடுதூது” சுவடியின், பாட்டில் சிக்கிக் கொண்ட டாக்டர் உ.வே.சாமிநாதையர், தமிழ் மொழி தன்னிகரற்றது என உணர்ந்து,

“திருந்த உதிப்பித்த பன்னூல் ஒளிர அடியேன் பதிப்பிக்கவே கடைக்கண் பார்”
என்ற இரண்டடியை அந்தப் பாட்டில் சேர்த்து இவ்வாறு பூர்த்தி செய்து,

“இருந்தமிழே உன்னால் இருந்தேன் இமையோர் விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன்  திருந்த உதிப்பித்த பன்னூல் ஒளிர அடியேன் பதிப்பிக்கவே கடைக்கண் பார்”

தன் வாழ் நாள் முழுவதைவதும் தமிழுக்கே தொண்டாற்றினார். இந்தப் பாட்டைத் தான் நாம் “தமிழ்த் தெய்வ வணக்கம்” என்கிறோம்.

உ. வே. சா. அழிந்து போக இருந்த பண்டைய சங்க இலக்கியங்கள், காப்பியங்கள், புராணங்கள், சிற்றிலக்கியங்கள், என 90 க்கு மேற்பட்ட ஓலைச்சுவடிகளுக்கு நூல்வடிவம் தந்து அவற்றை அழிவில் இருந்து காத்தவர். ஓலைச் சுவடிகளை தேடித் தேடிச் சேகரித்து, பகுத்து, பாடவேறுபாடு கண்டு, தொகுத்து, பிழை திருத்தி அச்சிலேற்றி பின் அவற்றிற்கு உரையும் எழுதியவர்.

இன்று நாம் நம் தமிழ் இலக்கியத்தின் தொன்மையையும், செழுமையையும் அறிகிறோம் என்றால் அதற்கு முக்கியக் காரணமானவர் உ. வே. சா. தான் என்பதே தகும்.

வேங்கடராமன் என்றப் பிறப்பு பெயர் கொண்ட உ. வே. சாமிநாதையரை, அவரின் உற்றார், உறவினர் வேறுமொழிகள் கற்கச் சொன்னர். தந்தையோ இசை கற்கக் கூறினர். ஆனால் தமிழுக்கு, தமிழுக்கு தமிழுக்கெனவே தன்னை அர்ப்பணித்துக்கொண்டார் உ வே சா.

ஒல்லும் வகையெல்லாம் தமிழுக்கு ஓயாது உழைத்த அவரை “தமிழ்த் தாத்தா” என்று கல்கி கொடுத்த பட்டத்தை கொண்டு நாம் இன்று நன்றியுடன் அழைக்கிறோம். தமிழைக் காத்த இந்த நம் தவப்புதல்வனுக்கு இன்று பிறந்த தினம் (02-19-1855).

இவரை,
“பொதியமலைப் பிறந்த மொழி வாழ்வறியும் காலமெல்லாம் புலவர் வாயில் துதியறிவாய்,
அவர் நெஞ்சில் வாழ்த்தறிவாய், இறப்பின்றித் துலங்குவாயே.”

என்று முண்டாசுக் கவிஞன் பாரதி வாழ்த்தினார்.  நாமும் அவர் பிறந்த இந்த நாளில், அவரை வாழ்த்தி நன்றியுடன் வணங்குவோம்.

“தமிழ்க்காத்தாய் தாய்க்காத்தாய் தாத்தா உயிர்க்காத்தாய்
அமிழ்த மொழிகாத்தாய் ஆம்”

-புவனா கருணாகரன், யு.எஸ்.ஏ

http://www.A1TamilNews.com

From around the web