இயக்குநர் அடம்… தாமதமாகும் தளபதி 62!

முருக இயக்குநரும் தளபதி நடிகரும் இணையும் படம் பட்ஜெட் காரணமாகவே தாமதமாவதாகச் சொல்கிறார்கள். முருக இயக்குநரும் தளபதி நடிகரும் மூன்றாவது முறையாக இணைகிறார்கள். இதற்கு முன் இணைந்த தண்ணீர் பிரச்னை படம் 70 கோடிகளில்தான் தயாரானது. ஆனால் இப்போது எடுக்கும் படத்துக்கு 140 கோடி வேண்டும் என்கிறாராம் இயக்குநர். ஃபர்ஸ்ட் காப்பியில்தான் பண்ணுவேன் என்று வேறு அடம் பிடிக்கிறாராம். தளபதியின் முந்தைய படத்துக்கு 80 கோடி திட்டமிடப்பட்டு இளம் இயக்குநர் அதை 125 கோடி அளவுக்கு இழுத்து
 

இயக்குநர் அடம்… தாமதமாகும் தளபதி 62!

முருக இயக்குநரும் தளபதி நடிகரும் இணையும் படம் பட்ஜெட் காரணமாகவே தாமதமாவதாகச் சொல்கிறார்கள்.

முருக இயக்குநரும் தளபதி நடிகரும் மூன்றாவது முறையாக இணைகிறார்கள். இதற்கு முன் இணைந்த தண்ணீர் பிரச்னை படம் 70 கோடிகளில்தான் தயாரானது. ஆனால் இப்போது எடுக்கும் படத்துக்கு 140 கோடி வேண்டும் என்கிறாராம் இயக்குநர். ஃபர்ஸ்ட் காப்பியில்தான் பண்ணுவேன் என்று வேறு அடம் பிடிக்கிறாராம்.

தளபதியின் முந்தைய படத்துக்கு 80 கோடி திட்டமிடப்பட்டு இளம் இயக்குநர் அதை 125 கோடி அளவுக்கு இழுத்து விட்டார். ‘என்னை விட ஜுனியர் அவர் படத்துக்கு செலவு பண்ணுவீங்க… இத்தனை ப்ளாக் பஸ்டர் படங்கள் தந்த எனக்கு தர மாட்டீங்களா?’ என்று சண்டை போடுகிறாராம். இதனால் இழுபறியில் இருக்கிறது பட தயாரிப்பு.

இந்த இயக்குநரின் முந்தைய சிலந்தி படம் படுதோல்வி அடைந்ததால் இந்த அமவுண்டுக்கு ஓகே சொல்லத் தயங்குகிறார்களாம்.

From around the web