தமிழுக்காக  3 மில்லியன் டாலர் நன்கொடை வழங்கும் டெக்சாஸ் அரசு!

ஹூஸ்டன் : அமெரிக்காவில் ஹூஸ்டன் பல்கலைக் கழகத்தில் அமையவுள்ள தமிழ் ஆய்வுகள் இருக்கைக்காக, டெக்சாஸ் மாநில அரசு சார்பில் 3 மில்லியன் டாலர்கள் நன்கொடை வழங்க உள்ளார்கள். அமெரிக்காவின் நான்காவது பெரிய மாநகரமான ஹூஸ்டனில் அமைந்துள்ள யுனிவர்சிட்டி ஆப் ஹூஸ்டன் பல்கலைக்கழகத்தில் தமிழ் ஆய்வுகளுக்கான இருக்கை அமைப்பதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு, பல்கலைக் கழகத்தின் ஒப்புதலும் கிடைத்துள்ளது. இதற்கான தொடக்க வைப்புத் தொகையாக 6 மில்லியன் டாலர்கள் தேவைப்படுகிறது. அதில் சரிபாதியான 3 மில்லியன் டாலர்களை டெக்சாஸ்
 
 
தமிழுக்காக  3 மில்லியன் டாலர் நன்கொடை வழங்கும் டெக்சாஸ் அரசு!
ஹூஸ்டன்  அமெரிக்காவில்  ஹூஸ்டன் பல்கலைக் கழகத்தில் அமையவுள்ள தமிழ் ஆய்வுகள் இருக்கைக்காக, டெக்சாஸ் மாநில அரசு  சார்பில்  3 மில்லியன் டாலர்கள் நன்கொடை வழங்க உள்ளார்கள்.
 
அமெரிக்காவின் நான்காவது பெரிய மாநகரமான ஹூஸ்டனில் அமைந்துள்ள  யுனிவர்சிட்டி ஆப் ஹூஸ்டன் பல்கலைக்கழகத்தில் தமிழ் ஆய்வுகளுக்கான இருக்கை அமைப்பதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு, பல்கலைக் கழகத்தின் ஒப்புதலும் கிடைத்துள்ளது.  
தமிழுக்காக  3 மில்லியன் டாலர் நன்கொடை வழங்கும் டெக்சாஸ் அரசு!
இதற்கான தொடக்க வைப்புத் தொகையாக 6 மில்லியன் டாலர்கள் தேவைப்படுகிறது. அதில் சரிபாதியான 3 மில்லியன் டாலர்களை டெக்சாஸ் மாநில அரசு வழங்க முன் வந்துள்ளது. மீதமுள்ள 3 மில்லியன் டாலர்களை உலகத் தமிழர்களிடமிருந்து நிதி திரட்ட முயற்சிகள் நடைபெற்று வருகிறது.
 
முதல் கட்டமாக, செப்டம்பர் 30ம் தேதி ஹூஸ்டனில் “நிறுவன நன்கொடையாளர்கள் விருந்து” ஏற்பாடு செய்யப்பட்டது. இதில் பங்கேற்றவர்கள், 1 லட்சத்து 20 ஆயிரம் டாலர்கள், இந்திய மதிப்பில் சுமார் ஒரு கோடி ரூபாய் நன்கொடையாக அளித்து உள்ளார்கள். பாரதி கலை மன்றம், தமிழ்நாடு அறக்கட்டளையின் ஹூஸ்டன் கிளை மற்றும் மீனாட்சி அம்மன் ஆலயம் மற்றும் ஹூஸ்டன் தமிழர்கள் சார்பில் ஏற்பாடுகள் செய்யப் பட்டிருந்தது.
தமிழுக்காக  3 மில்லியன் டாலர் நன்கொடை வழங்கும் டெக்சாஸ் அரசு!
ஹூஸ்டன் தமிழ் இருக்கை மூலம், தமிழுக்கு மேலும்  ஒரு  அரியணை அமைத்து சிறப்பு சேர்க்கும் வகையில், இயல் இசை நாடகம் பற்றிய ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு ஆவணப்படுத்தப்படும். தமிழின் பெருமையை உலகெங்கும் பறை சாற்ற வழிவகை செய்யப்படும். அடுத்த தலைமுறைத் தமிழர்களுக்கு பயன் உள்ள வகையிலும் இந்த இருக்கையின் செயல்பாடுகள் வடிவமைக்கப் பட்டுள்ளன. 
 
உலகத் தமிழர்கள் ஆதரவளிக்குமாறு ஹூஸ்டன் தமிழ் இருக்கை குழுவினர் கோரிக்கை விடுத்துள்ளார்கள். நன்கொடை மற்றும்  மேலும் தகவல்களுக்கு   https://houstontamilchair.org  இணையத்தளத்திலும்   https://www.facebook.com/HoustonTamilStudiesChair/ என்ற முகநூல் பக்கத்திலும் காணலாம்.
 
தமிழ் மொழி வளர்ச்சிக்காக அமெரிக்காவின் மிகப்பெரிய மாநிலமான டெக்சாஸ் அரசின்  3 மில்லியன் டாலர்கள் நன்கொடை, தமிழர்களுக்கும் தமிழ் மொழிக்கும் பெருமை சேர்க்கும் வகையில் அமைந்துள்ளது. 
தமிழுக்காக  3 மில்லியன் டாலர் நன்கொடை வழங்கும் டெக்சாஸ் அரசு!
– வணக்கம் இந்தியா

From around the web