கனடாவில் நடைமேடையில் வாகனத்தை ஓட்டி 10 பேர் கொலை!

கனடா: டொரண்டோவில் பாதசாரிகள் மீது வேன் ஒன்று வேண்டுமென்றே மோதியதில் 10 பேர் கொல்லப்பட்டுள்ளனர்; மேலும் 15 பேர் காயமடைந்துள்ளனர் என போலிஸார் தெரிவித்துள்ளனர். அந்த வாகனத்தை ஓட்டியவரின் பெயர் அலெக் மினாசியன் என தெரியவந்துள்ளது. அவருக்கு வயது 25. இந்த சம்பவம் தொடர்பாக “நீண்ட விசாரணை” நடைபெறும் என்றும் டொரோண்டாவின் போலீஸ் அதிகாரி தெரிவித்துள்ளார். மேலும் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்கள் மற்றும் சாட்சியங்களுக்கு உதவ தொலைப்பேசி சேவை மையம் அமைக்கப்படும் எனவும் தெரிவித்தார். இது வேண்டுமென்றே நிகழ்த்தப்பட்ட
 

கனடா: டொரண்டோவில் பாதசாரிகள் மீது வேன் ஒன்று வேண்டுமென்றே மோதியதில் 10 பேர் கொல்லப்பட்டுள்ளனர்; மேலும் 15 பேர் காயமடைந்துள்ளனர் என போலிஸார் தெரிவித்துள்ளனர்.

அந்த வாகனத்தை ஓட்டியவரின் பெயர் அலெக் மினாசியன் என தெரியவந்துள்ளது. அவருக்கு வயது 25.

இந்த சம்பவம் தொடர்பாக “நீண்ட விசாரணை” நடைபெறும் என்றும் டொரோண்டாவின் போலீஸ் அதிகாரி தெரிவித்துள்ளார். மேலும் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்கள் மற்றும் சாட்சியங்களுக்கு உதவ தொலைப்பேசி சேவை மையம் அமைக்கப்படும் எனவும் தெரிவித்தார்.

இது வேண்டுமென்றே நிகழ்த்தப்பட்ட நிகழ்வு என்றும், ஆனால் இதற்கான காரணங்கள் தெரியவில்லை என்றும் போலீஸ் தரப்பில் இருந்து தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த பயங்கரமான சம்பவத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தனது ஆறுதலை தெரிவித்துள்ளார் கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ

“இந்த சம்பவ இடத்தில் மீட்பு பணியில் ஈடுபட்டுருப்பவர்களுக்கு நன்றி நாங்கள் இதை தீவிரமாக கண்காணித்து கொண்டிருக்கிறோம்” என்றும் அவர் தெரிவித்தார்.

From around the web