ஜூன் 1ம் தேதி முதல் கோவில்கள், சர்ச், மசூதிகள் திறக்கப்படும்! முதல்வர் அறிவிப்பு!

கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த நாடு முழுவதும் நான்காவது கட்ட ஊரடங்கு மே31ம் தேதி வரை அறிவிக்கப்பட்டுள்ளது. தொடர் ஊரடங்கின் காரணமாக அனைத்து வழிபாட்டுத் தலங்களிலும் பக்தர்களுக்கு தரிசனத்திற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. அனைத்து கோவில்களிலும் ஆகம விதிப்படி பூஜைகள் மட்டும் நடத்தப்பட்டு வருகின்றன. பல மாநிலங்கள் நான்காவது கட்ட ஊரடங்கில் படிப்படியாக தளர்வுகள் அறிவித்து வரும் நிலையில் கர்நாடகத்தில் ஜூன் 1ம் தேதி முதல் கோவில்கள், மசூதிகள், கிறிஸ்தவ ஆலயங்கள் திறக்கப்படும் என முதல்வர் எடியூரப்பா அறிவித்துள்ளார். இது
 

ஜூன் 1ம் தேதி முதல் கோவில்கள், சர்ச், மசூதிகள் திறக்கப்படும்! முதல்வர் அறிவிப்பு!கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த நாடு முழுவதும் நான்காவது கட்ட ஊரடங்கு மே31ம் தேதி வரை அறிவிக்கப்பட்டுள்ளது. தொடர் ஊரடங்கின் காரணமாக அனைத்து வழிபாட்டுத் தலங்களிலும் பக்தர்களுக்கு தரிசனத்திற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
அனைத்து கோவில்களிலும் ஆகம விதிப்படி பூஜைகள் மட்டும் நடத்தப்பட்டு வருகின்றன.

பல மாநிலங்கள் நான்காவது கட்ட ஊரடங்கில் படிப்படியாக தளர்வுகள் அறிவித்து வரும் நிலையில் கர்நாடகத்தில் ஜூன் 1ம் தேதி முதல் கோவில்கள், மசூதிகள், கிறிஸ்தவ ஆலயங்கள் திறக்கப்படும் என முதல்வர் எடியூரப்பா அறிவித்துள்ளார்.

இது தவிர ஹோட்டல்கள், தங்கும் விடுதிகளும் ஜூன் 1ம் தேதி முதல் திறக்க உத்தேசிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பில் மத்திய அரசின் ஒப்புதலுக்காக காத்திருப்பதாகவும் அம்மாநில முதல்வர் அறிவித்துள்ளார்.

கொரோனாவை எதிர்த்து போராடி அதனுடன் வாழ மக்கள் அனைவரும் பழகிக்கொள்ள வேண்டும். கொரோனாவை கட்டுப்படுத்தும் பணிகள் தீவிரப்படுத்தப்படுவதுடன் பொருளாதாரத்தை சீர்படுத்தவும் நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டியது அவசியம்.

இந்தியாவிலேயே அதிகளவு கொரோனா பரிசோதனை கர்நாடக மாநிலத்திலேயே நடைபெறுகிறது. மற்ற மாநிலங்களுக்கு முன் மாதிரியாகத் திகழும் கர்நாடகா மக்கள் நலனைக் கருத்தில் கொண்டு வழிபாட்டு தலங்கள் திறப்பதிலும் முயற்சிகள் எடுத்து வருகிறது என கர்நாடக முதலமைச்சர் எடியூரப்பா அறிவித்துள்ளார்.

A1TamilNews.com

From around the web