செல்போன் நிறுவனங்களின் சேவை இலவசமாக நீட்டிப்பு!

தொலைதொடர்பு ஆணையம் விடுத்த கோரிக்கையை ஏற்று பி.எஸ்.என்.எல்., ஏர்டெல், வோடோஃபோன், ஜியோ நிறுவனங்கள் 21 நாள் ஊரடங்கு காலக்கட்டத்தில் இலவசமாக சேவையை தொடர உறுதியளித்துள்ளனர். ப்ரீபெய்டு கட்டணத்தில் செல்போன் சேவை பயன்படுத்துபவர்களுக்கு ஏப்ரல் 20ம் தேதி வரை ரீசார்ஜ் செய்யாமலேயே சேவை நீட்டிப்பு வழங்குவதாக பி.எஸ்.என்.எல். மற்றும் ஏர்டெல் நிறுவனங்கள் அறிவித்துள்ளனர். வோடோஃபோன் நிறுவனம் பத்து ரூபாய் க்கான டாக் டைம் சேர்க்கப்பட்டுள்ளதாகவும், ப்ரீபெய்டு சேவை ஏப்ரல் 17 வரை கால நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளது. ஜியோ
 

செல்போன் நிறுவனங்களின் சேவை இலவசமாக நீட்டிப்பு!தொலைதொடர்பு ஆணையம் விடுத்த கோரிக்கையை ஏற்று பி.எஸ்.என்.எல்., ஏர்டெல், வோடோஃபோன், ஜியோ நிறுவனங்கள் 21 நாள் ஊரடங்கு காலக்கட்டத்தில் இலவசமாக சேவையை தொடர உறுதியளித்துள்ளனர்.

ப்ரீபெய்டு கட்டணத்தில் செல்போன் சேவை பயன்படுத்துபவர்களுக்கு ஏப்ரல் 20ம் தேதி வரை ரீசார்ஜ் செய்யாமலேயே சேவை நீட்டிப்பு வழங்குவதாக பி.எஸ்.என்.எல். மற்றும் ஏர்டெல் நிறுவனங்கள் அறிவித்துள்ளனர்.

வோடோஃபோன் நிறுவனம் பத்து ரூபாய் க்கான டாக் டைம் சேர்க்கப்பட்டுள்ளதாகவும், ப்ரீபெய்டு சேவை ஏப்ரல் 17 வரை கால நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளது.

ஜியோ நிறுவனம் 100 நிமிடம் பேச்சுக்கும், 100 மெசேஜ்களும் இலவசமாக வழங்க முன் வந்துள்ளது. ஏப்ரல் 17 வரை ப்ரீபெய்டு கட்டணம் ரீசார்ஜ் செய்யாவிட்டாலும், இன்கமிங் கால்கள்  தொடரும் என்று அறிவித்துள்ளது.

முன்னதாக செல்போன் நிறுவனங்கள் ஒரு மாத காலம் இலவச சேவை வழங்க வேண்டும் என்று காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி கடிதம் மூலம் இந்த நிறுவனங்களுக்கு கோரிக்கை விடுத்து இருந்தார்.

A1TamilNews.com

From around the web