‘ரஜினி ஆதரவு வேண்டும் என்றால் ரஜினி தலைமையை கமல் ஏற்கட்டும்!’ – தமிழருவி மணியன் அதிரடி!

சென்னை: கடந்த ஆண்டு ரஜினிகாந்த் அரசியலுக்கு நிச்சயமாக வருவேன் என்று அறிவிக்கும் முன்பு இருந்தே அவருடன் தீவிர ஆலோசனை செய்து வருபவர் காந்திய மக்கள் இயக்கத்தின் தலைவர் தமிழருவி மணியன். ரஜினிகாந்தின் அரசியல் முடிவையும், அவர் தமிழகத்தின் முதல்வராக வேண்டும் என்ற கருத்தையும் வலியுறுத்தி வரும் தமிழகத்தின் முக்கிய மூத்த தலைவரும் ஆவார். வாரம் இரு முறை வெளிவரும் பத்திரிக்கை ஒன்றுக்கு தமிழருவி மணியன் அளித்துள்ள பேட்டியில் ரஜினிகாந்த் தலைமையை கமல்ஹாசன் ஏற்க வேண்டும் என்று கூறியுள்ளார்.
 

சென்னை: கடந்த ஆண்டு ரஜினிகாந்த் அரசியலுக்கு நிச்சயமாக வருவேன் என்று அறிவிக்கும் முன்பு இருந்தே அவருடன் தீவிர ஆலோசனை செய்து வருபவர் காந்திய மக்கள் இயக்கத்தின் தலைவர் தமிழருவி மணியன். ரஜினிகாந்தின் அரசியல் முடிவையும், அவர் தமிழகத்தின் முதல்வராக வேண்டும் என்ற கருத்தையும் வலியுறுத்தி வரும் தமிழகத்தின் முக்கிய மூத்த தலைவரும் ஆவார்.

வாரம் இரு முறை வெளிவரும் பத்திரிக்கை ஒன்றுக்கு தமிழருவி மணியன் அளித்துள்ள பேட்டியில் ரஜினிகாந்த் தலைமையை கமல்ஹாசன் ஏற்க வேண்டும் என்று கூறியுள்ளார். மேலும், தண்ணீர் பிரச்சனையை தீர்க்கக்கூடியவர்களுக்கு வாக்களியுங்கள் என்ற ரஜினிகாந்தின் வேண்டுகோள் பாஜகவுக்கான ஆதரவு இல்லை என்றும் தெளிவுபடுத்தியுள்ளார்.

இது குறித்து தமிழருவி மணியன் கூறியுள்ளதாவது:

“ரஜினி ஆதரவு கொடுத்தால் 40 தொகுதிகளிலும் ஜெயிப்பேன் என் கமல்ஹாசன் சொல்லி இருக்கிறார். அப்படியென்றால் ரஜினிக்கு வாக்குகளைப் பெறக்கூடிய சக்தி, தமிழக மக்களிடம் அவருக்கு இருக்கும் ஈர்ப்பு மிகப் பெரியது என்று கமல்ஹாசனே ஒப்புக் கொள்கிறார்.

அப்படி என்றால் ரஜினிகாந்தின் தலைமையை ஏற்றுக்கொண்டு இணைந்து விடலாமே. இந்த விவகாரத்தில் ரஜினி என்ன நினைக்கிறார் என்பதற்கும் அவர் மவுனமாக இருப்பதற்கும் என்னால் பதில் சொல்ல முடியாது.

ரஜினியைப் பின்பற்றக் கூடியவர்கள் லட்சக்கணக்கில் இருக்கிறார்கள். அவர்களை வாக்களிக்க வேண்டாம் எனச் சொல்வதில் ரஜினிக்கு உடன்பாடு இல்லை. அதே சமயத்தில் அவர்களுக்கு ஒரு நல்ல வழியைக் காட்ட நினைக்கிறார். தமிழகத்தில் இருக்கும் நீர்நிலைகளை ஒன்றாக இணைக்க வேண்டும் என ரஜினி ஆசைப்படுகிறார். எனவேதான் அப்படிச் சொல்லியிருக்கிறார். இதில் பாஜக சார்பு நிலை எதுவும் இல்லை,” என்று கூறியுள்ளார்.

கமல் ஹாசன் ரஜினிகாந்தின் ஆதரவு கேட்டதற்கு பதிலளிக்கும் வகையிலும், தண்ணீர் பிரச்சினைக்குத் தீர்வு காண்பவர்களுக்கு வாக்களியுங்கள் என்ற ரஜினிகாந்தின் கூற்றை அதிமுக-பாஜகவினர் தங்களுக்கு சாதகமாக பயன்படுத்த நினைப்பதற்கும், ரஜினி தரப்பின் விளக்கமாக தமிழருவி மணியனின் பேட்டி அமைந்துள்ளது.

 

From around the web