இரவில் இளநீர் திருடி, பகலில் கடை போட்ட பலே திருடன்..! சிக்கியது எப்படி?

 
Chennai

சென்னையில் இரவு நேரங்களில் இளநீர் திருடிய ஆசாமி கையும் களவுமாக பிடிபட்டான்.

சென்னை கே.கே.நகர் 80 அடி சாலையில் உள்ள இளநீர் கடைகளில் இரவு நேரங்களில் இளநீர் திருடு போவது தொடர் கதையானது.

இதற்கு காரணமான திருடனை பிடிக்க வியாபாரிகள் முடிவு செய்து, இரவில் மறைந்து இருந்தனர். அப்போது லோடு சைக்கிளில் வந்து இளநீர் திருடியவனை கையும் களவுமாகப் பிடித்து போலீசில் ஒப்படைத்தனர்.

விசாரணையில் அவன் பெயர் ரஜினிகாந்த் என்பதும், தினமும் 200 முதல் 300 இளநீர் காய்களைத் திருடி கோயம்பேட்டில் கடைப் போட்டு விற்று வந்ததும் தெரியவந்தது.

From around the web