ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கு போட்டியின்றி தேர்வான பெண்..! பதவி ஏற்க தடை விதித்த சென்னை உயர்நீதிமன்றம்

 
High-Court

நாயக்கனேரி ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கான தேர்தலில் போட்டியின்றி தேர்வான பட்டியலின பெண், பதவியேற்க சென்னை உயர்நீதிமன்றம் தடை விதித்துள்ளது.

தமிழ்நாட்டில் புதிதாக உருவாக்கப்பட்ட 9 மாவட்டங்களில் உள்ளாட்சி அமைப்புகளுக்கு அக்டோபர் 6 மற்றும் 9 ஆகிய தேதிகளில் 2 கட்டங்களாக தேர்தல் நடைபெற்றது.

அதன்படி, திருப்பத்தூர் மாவட்டம் நாயக்கனேரி ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கான தேர்தலில் பட்டியலின பெண் போட்டியின்றி தேர்வானார்.

பட்டியலினத்தை சேர்ந்த ஒரு குடும்பம் கூட தங்கள் கிராமத்தில் இல்லாத நிலையில், ஊரக உள்ளாட்சி தேர்தலில் நாயக்கநேரி ஊராட்சி தலைவர் பதவி பட்டியலின பெண்களுக்கு என அறிவிக்கப்பட்டதற்கு எதிராக அப்பகுதி மக்கள் தேர்தலை புறக்கணித்தனர். மேலும் இது தொடர்பாக சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டிருந்தது.

இதையடுத்து போட்டியின்றி தேர்வான பட்டியலின பெண், ஊராட்சி மன்ற தலைவராக பதவியேற்க நீதிமன்றம் தடை விதித்தது. மேலும் தேர்தல் ஆணையம் பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணை நவம்பர் 1-ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

From around the web