தமிழ்நாட்டில் விநாயகர் சதுர்த்திக்கு கட்டுப்பாடு ஏன்? முதல்வர் மு.க.ஸ்டாலின் விளக்கம்

 
MKS-Vinayagar

ஒன்றிய அரசின் வழிகாட்டுதல்களின் அடிப்படையில் தான் விநாயகர் ஊர்வலத்திற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது என முதல்வர் மு.க.ஸ்டாலின் விளக்கம் அளித்துள்ளார்.

தமிழ்நாடு சட்டப்பேரவையின் இன்றைய கூட்டத்தில் விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டத்திற்கு தடை விதிக்கப்பட்டது குறித்து பாஜக உறுப்பினர் நயினார் நாகேந்திரன் கேள்வி எழுப்பினார்.

இதற்கு பதிலளித்த முதல்வர் மு.க. ஸ்டாலின் பேசுகையில்,

ஒன்றிய அரசின் அறிவுரை அடிப்படையிலேயே விநாயகர் சதுர்த்திக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. ஊர்வலங்கள், கூட்டமாக சேர்ந்து கொண்டாட மட்டுமே தடை விதிக்கப்பட்டுள்ளது. விநாயகர் சதுர்த்தியை கொண்டாட வேண்டாம் என நாங்கள் கூறவில்லை என்றார்.

From around the web